என்னோட படத்துக்கு என் படம் தான் விளம்பரம்..! வதந்திகளுக்கு ஒரேடியாக முற்றுப்புள்ளி வைத்த தல அஜித்..!

My film is the advertisement for my film thala ajith open talk: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தல அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்து பல்வேறு கஷ்டங்களையும் கடந்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் இதற்கான தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள்.

இந்நிலையில் நமது நடிகர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவ்வாறு இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மனதில் அதிகரித்துள்ளது மட்டுமில்லாமல் திரைப்படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு  வெளியாக உள்ளது.

மேலும் இந்த திரைப்படம் வெளியாகும் அதே நேரத்தில் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளது இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஆவளுடன் இருப்பது மட்டுமில்லாமல் இந்த இரண்டு ரசிகர்களும் இணையத்தில் அதிக அளவு போட்டி போட்டு வருகிறார்கள்.

மேலும் ஒட்டுமொத்த ரசிகர்களும் மிக அதிக அளவு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரீ ரிலீஸ் விழாவில் நடிகர் அஜித் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வந்தன இதனிடையே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தல அஜித்தின் மேனேஜர் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர் கூறியது என்னவென்றால் ஒரு நல்ல படத்திற்கு அந்த திரைப்படமே விளம்பரம் அன் கண்டிஷனல் லவ் என  தல அஜித் கூறியுள்ளதாக அவருடைய மேனேஜர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் ஆகையால் தல அஜித்தின் துணிவு திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறாது என தெரியவந்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் இது என்ன புதிதா தல அஜித் எந்த ஒரு திரைப்பட விழாவிலும் கலந்து கொள்வது கிடையாது என்பது தெரிந்த விஷயம் தான். இந்த திரைப்படத்தில் மட்டும் எப்படி கலந்து கொள்வார் என ரசிகர்கள் மனதை தேற்றிக்கொண்டு உள்ளார்கள்.

Leave a Comment