சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன் இந்த திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி ஒருவழியாக மார்ச் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியானது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக பார்த்து ரசித்தனர்.
எதற்கும் துணிந்துவன் பாலியல் தொல்லையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது அதேசமயம் இந்த படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட் சீன்கள் செம்மையாக இருந்ததாக கூறுகின்றனர் இந்த படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்களும் அனைவரும் நல்ல விமர்சனத்தை கொடுத்தால் தற்போதும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் படக்குழு எதிர்பார்த்தபடி வசூலும் நன்றாகவே நடைபெற்று வருகிறதாம்.
இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சிபி, ரெடின் கிங்ஸ்லி, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், வினய் ராஜ் பிரபல நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சூர்யாவின் மகள் மற்றும் மகன் இந்த படத்தை பார்த்துவிட்டு சில கருத்துக்களை சூர்யா அவர்களிடமே தெரிவித்துள்ளார்கள்.
அது குறித்து பேட்டி ஒன்றில் சூர்யா வெளிப்படையாக சொன்னது : எனது மகள் தியா படத்தைப் பார்த்துவிட்டு என்னுடைய நடிப்பையும், என்னுடைய ரோலையும் ரொம்ப பாராட்டினார் சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் சூரரை போற்று, ஜெய்பீம் படங்களின் வரிசையில் இந்தப் படத்தை வைப்பதாக கூறினார்.
அதே போல எனது மகன் தேவ்வும் கூட இந்த படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறினார் கேட்டவர்களுக்கு எதிராக இப்படி ஒரு கோபமான அவதாரம் எடுத்து இதுவரை பார்த்ததில்லை என்றார். மக்களும் சரி எனது மகன், மகள்களும் பாராட்டியது எனக்கு சந்தோஷத்தை கொடுப்பதாக சூர்யா மகிழ்ச்சியாக சொன்னார்.