எனக்கு போட்டி இந்த 4 நடிகைகள் தான்..! ப்ரியா பவானி சங்கர் யாரை கை காட்டுகிறார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு நடிகை பிரியா பவானி சங்கர் முதலில் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்தார் அதன் பிறகு சின்ன திரையில் சீரியல்களில் தென்பட்டு வந்த இவர் திடீரென மேயாத மான் என்னும் படத்தில் நடித்து வெள்ளி திரைக்கு என்ட்ரி கொடுத்தார்.

முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது அதனைத் தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கருக்கு தற்பொழுது வாய்ப்புகள் ஏராளமாக குவிவதோடு மட்டுமல்லாமல் டாப் ஹீரோக்களும் இவரை கமிட் செய்து வருகின்றனர். 2023 ல் கூட பத்திற்க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இருக்கின்றன.

அதில் ஒரு சில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன தற்போது கைவசம் பொம்மை, டிமாண்ட் காலனி 2 மற்றும் தெலுங்கு படம் ஒன்றிலும் இவர் நடித்து வருகிறார் இப்படிப்பட்ட நடிகை ப்ரியா பவானி சங்கர் சினிமா உலகில் வெற்றி படங்களை கொடுத்தாலும் அவர் இதுவரைக்கும் கிளாமர் காட்டியதே கிடையாது இருந்தாலும்..

அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர் இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கருக்கு போட்டியாக திரையுலகில் இருக்கும் நடிகைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் அதன்படி அவர் கூறியது ஐஸ்வர்யா ராஜேஷ் கீர்த்தி சுரேஷ் ஐஸ்வர்யா லட்சுமி சாய் பல்லவி எனக் கூறி உள்ளார்.

பிரியா பவானி சங்கர் வருடத்திற்கு 5 6 படங்கள் நடித்தால் அதில் இரண்டு மூன்று படம் வெற்றி பெறும் இதே ட்ராக்கில் அவர் ஓடினால் இவர் அனைத்து நடிகைகளையும் முந்தி அவர் முதலிடத்திற்கு வருவார் என பலரும் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..

Leave a Comment

Exit mobile version