என்னுடைய ஆஃபீஸ்க்கு வரணும்னா.. எனது உதவி இயக்குனர்கள் முதலில் மது அருந்த வேண்டும் – மிஷ்கின்.!

0
myskin-
myskin-

இயக்குனர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார் முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால் அடுத்தடுத்த படங்களை துணிந்து இயக்கினார் அந்த வகையில் அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் என இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான்..

தற்பொழுது கூட நடிகை ஆண்ட்ரியாவை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து பிசாசு 2 திரைப்படத்தை எடுத்துள்ளார். நிச்சயம் இந்த திரைப்படம் பெரிய அளவில் பேசப்படும் என இயக்குனர் மிஷ்கின் அடிக்கடி சொல்லி வருகிறார். இயக்குனர் மிஷ்கின் படங்கள் இயக்குவதையும் தாண்டி அவ்வபொழுது சிறப்பான கதைகள் தன்னை தேடி வந்தால் துணிந்து நடிக்கவும் செய்து வருகிறார்.

இதனால் நடிகர் மிஷ்கின் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக சினிமா உலகில் ஓடிக்கொண்டிருக்கிறார். உதவி இயக்குனராக பணியாற்றிய பல உதவி இயக்குனர்கள் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்து படங்களை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் எட்டு தோட்டாக்கள் என்ற திரைப்படத்தை இயக்கி அறிமுகமானார்.

அதன் பிறகு தற்போது அதர்வாவை வைத்து குருதி ஆட்டம் என்ற படத்தை இயக்கியுள்ளார் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதியை வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் விழாவில் இயக்குனர் மிஷ்கின் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது.

எனது உதவி இயக்குனர்கள் எனது ஆபிசுக்கு வந்தவுடன் முதலில் மது அருந்தத்தான் சொல்லி தருவேன். குடித்துவிட்டு மனதில் இருப்பதை உளறு உண்மையை சொல்லு என்னை அடி ஆனால் என்னிடம் உண்மையாக இரு..என்னுடைய உதவி இயக்குனர்கள் நல்ல படங்களை கொடுத்தால் என்னுடைய உதவி இயக்குனர்கள். அப்படி இல்லை என்றால் கிடையாது என கூறி பேசினார்.