இப்ப பார்த்தது வெறும் டிரைலர்.. அடுத்த படத்துல தான் என்னுடைய ஆக்சன் இருக்கு சிம்பு மாஸ் பேட்டி..!

0
simbu
simbu

இயக்குனர் கௌதமேனன் அண்மையில் நடிகர் சிம்பு வைத்து எடுத்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கிளாஸ் ஆன படமாக இருந்தது இந்த படத்தில் நடிகர் சிம்பு, siddhi idnani, kayadu lohar, ராதிகா சரத்குமார் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று ஓடியது. இந்த படத்தில் பிளஸ் என்னவென்றால் நடிகர் சிம்புவின் மாறுபட்ட நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திழுத்தது. மேலும் இந்த படத்திற்காக நடிகர் சிம்புவும் 22 கிலோ உடல் எடையை குறைத்து ஒரு சின்ன பையனாக சூப்பராக நடித்திருந்தார்.

தொடர்ந்து இந்த படம்  நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது அதன் காரணமாக வசூலிலும் அடித்து நொறுக்கிறது. இதுவரை உலக அளவில் மட்டுமே வெந்து திணிந்தது காடு திரைப்படம் சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாம் வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது இதனால் சிம்பு மற்றும் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாகம் குறித்து நன்மையில் பேசிய உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாகத்தில்  ஆக்சன் காட்சிகள் குறைவாக இருந்ததற்காக  ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதனை அடுத்து இந்த படத்தில் முத்து கேரக்டர் எப்படி டான் ஆகிறான் என்பதன் கதையாக இருந்தது அதன் காரணமாகவே  அதிகமான ஆக்சன் காட்சிகள் இடம்பெறவில்லை அடுத்த பாகத்தில் சண்டை மற்றும் மாஸான காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்று கூறியுள்ளார். இச்செய்தி தற்பொழுது சிம்பு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.