என்னது 300 கோடியா? இது என்ன உலகமாக உருட்ட இருக்கே..! முன்னணி நடிகர் என்று கூட பார்க்காமல் கழுவி கழுவி ஊற்றும் ப்ளு சட்டை மாறன்…

0
blue-sattai-maran
blue-sattai-maran

தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாரிசு திரைப்படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வெளியான போதும் வாரிசை போலதான் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனால் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிரி இருந்தது அது மட்டுமல்லாமல் இந்த படம் ஒரு குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக உருவாகியுள்ளதாக கூறப்பட்டு இருந்தபோது ரசிகர்களும், குடும்ப ரசிகர்களும் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து இருந்தார்கள்.

அவர்களது எதிர்பார்ப்பிற்கு இணங்க இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. வாரிசு திரைப்படத்துடன் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் மோதியது. ஒன்றுடன் ஒன்று சளைத்தது கிடையாது என்பது போல வசூலில் தாராளம் காட்டியது. இந்த நிலையில் இணையதளத்தில் ஒரு தகவல் புதிதாக பரவி வருகிறது. அதாவது வாரிசு திரைப்படம் இதுவரைக்கும் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த தகவலை பார்த்த விமர்ச்சகர் ஒருவர் வாரிசு வசூலை பங்கமாக கலாயித்து இருக்கிறார்.

இதை பார்த்த தளபதி ரசிகர்கள் அந்த விமர்சகரை திட்டி தீர்த்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் அவர் பதிவிட்ட அந்த ட்வீட் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதாவது சமீப காலங்களாக விஜயின் வாரிசு திரைப்படம் கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூல் செய்து வருவதாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியானது.

இதை பார்த்த விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது வாரிசு திரைப்படம் 300 கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவலை பார்த்துவிட்டு “இது உலக மகா உருட்டடா எப்பா” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இவருடைய இந்த ட்விட்டை பார்த்து தான் ரசிகர்கள் ப்ளு சாட்டை மாறனை திட்டி தீர்த்து வருகிறார்கள்.