முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் தமிழ் முன்னணி நடிகர்.!

0
muttiah muralitharan
muttiah muralitharan

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதி வருடத்திற்கு அரை டஜன் திரைப்படங்களில் நடித்து வெளியிடுபவர் இவர் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த திரைப்படம் ‘சிந்துபாத்’ இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி தற்போது லாபம, சங்கத்தமிழன், மாமனிதன், கடைசி விவசாயி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் இவர் இலங்கை கிரிக்கெட் வீரர் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை வெங்கட்பிரபுவின் உதவியாளரும் ஜெய் நடிப்பில் வெளியான கனிமொழி படத்தின் இயக்குனருமான ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை தென்னிந்திய தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து டார் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது இந்த திரைப்படம் இலங்கை மற்றும் உலக நாடுகள் என பல இடங்களில் படமாக்கப்பட இருக்கின்றன இந்த நிலையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டை எடுத்தவர்  என்ற பெருமையும் உண்டு அதுமட்டுமில்லாமல் இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அதனால் படத்துக்கு 800 தலைப்பு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் உருவாகும் இந்த திரைப்படத்தை உலகம் முழுவதும் ஒளிபரப்ப இருக்கிறார்கள் படக்குழு.

இந்த நிலையில் இதை பற்றி முத்தையா முரளிதரன் கூறுகையில் விஜய் சேதுபதி போன்று சிறந்த கலைஞர் என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது பெருமையாக கருதுகிறேன் என கூறினார்.