காதலர் தினத்தன்று காதலர்கள் கட்டாயமாக பார்க்கக்கூடிய திரைப்படங்கள்.! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.. வேற லெவல் ஃபீல்…

தமிழ் சினிமாவில் பல காதல் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இன்று வரையிலும் அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஏதேனும் ஒரு காட்சி வந்தாலே அந்த காட்சி இன்றும் பிரமிப்பாக இருக்கும் அப்படி ரசிகர்களை ஆழ்த்திய காதல் திரைப்படங்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

இயக்குனர் மணிரத்தினத்தின் காதல் திரைப்படங்களில் ஒன்றுதான் அலைபாயுதே இந்த திரைப்படத்தை இன்று பார்த்தாலும் சலித்துக் கொள்ளாத ஒரு குறையாக இருக்கும் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் மாதவன் ஷாலினியும் அவ்வளவு அழகாக நடித்திருப்பார்கள்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜீவா மற்றும் சமந்தா நடிப்பில் ஒரு அழகான காதல் திரைப்படம் தான் நீ தானே என் பொன்வசந்தம். இந்த திரைப்படத்தில் சிறு வயதில் இருந்து நண்பர்களாக பழகிய இவர்கள் எப்படி காதலர்களாக மாறுகிறார்கள் என்பதை அழகாக எடுத்துக் கூறியுள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்.

அலைபாயுதே என்ற ஒரு காதல் படத்தைக் கொடுத்து அழியாமல் இருந்த மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படம் லிவிங் டு கெதர்க்காக பிரதிபலிக்கும் படமாக அமைந்திருக்கிறது.

இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் இன்று வரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் பள்ளி பருவத்தில் காதலிப்பவர்கள் காதலித்தும் அதை காதலியிடம் சொல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த படம் கச்சிதமாக பொருந்தும்.

பாரத் மற்றும் சந்தியா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகிய காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் நாம் வாழ்க்கையோடு கச்சிதமாக பொருந்தும்  அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் பயங்கரமான காதலை வெளிப்படுத்தி உள்ளனர் பரத் மற்றும் சந்தியா.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி கண்ட திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்த திரைப்படத்தை நம் வாழ்க்கையில் கட்டாயமாக ஒரு முறையாவது பார்த்தே ஆக வேண்டும் என்ற ஒரு திரைப்படத்தில் இந்த திரைப்படமும் மூன்று.

இதனை தொடர்ந்து வாரணமாயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜா ராணி, முதல் நீ முடிவும் நீ, உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காதல் திரைப்படங்களாகும்.

Leave a Comment