க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு சிறந்த படமாக அமையுமென இசையமைப்பாளர் ஜிப்ரான் புகழ்ந்துள்ளார்!!

0

Music director Jibran praises Aiswarya Rajesh for this movie k/pey ranasingam: க/பெ ரணசிங்கம், பெ. விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாக இருக்கிறது. பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த கருப்பு தேவரின் மகன்தான் விருமாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படத்தை கே.ஜே. ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் ஜிப்ரான் அவர்கள்  இசையமைத்துள்ளார்.மேலும் இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, பூ ராம், வேல ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ போன்றோர் நடித்துள்ளார்கள். அது மட்டுமல்லாமல் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார்.

மேலும் இவர்களைத் தொடர்ந்து கவ்ரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக இறுதிகட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவுக்கு எப்படி ஒரு அறம் படமோ, அதுபோலவே ஐஸ்வர்யா ராஜேஷ்க்கும் க/பெ ரணசிங்கம் படம் ஒரு பெரும் படமாக அமையும் என இசையமைப்பாளர் ஜிப்ரான் புகழாரம் சூட்டியுள்ளார். தற்போது இந்த செய்தி இனையதளத்தில் வைரலாகி வருகிறது.