“துணிவு திரைப்படம்” எப்படி இருக்கு ஒரே வார்த்தையில் நச்சுன்னு சொன்ன இசையமைப்பாளர் ஜிப்ரான்..

0
ajith
ajith

அண்மை காலமாக நடிகர் அஜித்குமார் சிறந்த படங்களை கொடுக்கிறார் அந்த வகையில் தனது 66வது திரைப்படமான துணிவு திரைப்படத்தையும் நல்லபடியாக கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் டப்பிங் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் பட குழு தீவிரம் காட்டி வருகிறது.

துணிவு திரைப்படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, நடிகை மமதி சாரி, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பிக்பாஸ் பிரபலங்களான சிபி, அமீர் போன்றவர்களும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதால்..

இந்த படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் ஆனால் படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு தான் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்திலிருந்து ஒரு சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது. துணிவு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

துணிவு திரைப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கிறதாம்.. அதில் முதல் பாடலான சில்லா சில்லா பாடல் வேற லெவலில் உருவாகி இருப்பதாக ஏற்கனவே அவர் கூறியிருந்தார். இதை தொடர்ந்து தற்பொழுது ஒரு தகவலும் வெளிவந்துள்ளது. துணிவு படத்தின் இயக்குனர் ஹச். வினோத்துடன் இசையமைப்பாளர் ஜிப்ரான் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில்  போட்டு பதிவுகளையும் போட்டுள்ளார் அதில் அவர் சொன்னது.. எனது இயக்குனரின் பரபரப்பான ஷெட்யூலுக்குப் பிறகு ஒரு இசை விவாதம் மற்றும் எனது  புன்னகைகே துணிவு படத்தைப் பற்றிய அனைத்தையும் சொல்லிவிடும் என பதிவிட்டு இருக்கிறார் இந்த பதிவு தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.