பாட்ஷா ரஜினி போல் மாறிய “இசையமைப்பாளர் அனிருத்”.. இணையதளத்தில் லைக்குகளை அள்ளும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக ஓடிக் கொண்டிருப்பவர் அனிருத் இளம் வயதிலேயே இந்த அந்தஸ்தை பிடித்திருக்கிறார் இதுவே மிகப்பெரிய விஷயம். இவர் முதலில் தனுஷின் 3 படத்திற்கு இசையமைத்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் இந்த படத்திலேயே இவருடைய இசை பெரியளவில் வைரலானது.

அதை தொடர்ந்து அடுத்தடுத்த டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்தார் அந்த வகையில் அஜித்தின் வேதாளம், சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், விஜயின் மாஸ்டர், ரஜினியின் பேட்ட, கமலின் விக்ரம் என டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வெற்றி கண்டார் இப்படி திரையுலகில் ஓடிக்கொண்டிருக்கும் இவர் அவ்வபோது மேடை நிகழ்ச்சிகளில் பாடி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தும் வருகிறார்.

இதனால் அனிருத்துக்கு நாளா பக்கமும் காசு மழை பொழிகிறது.  அதே சமயம் இவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. இப்படி ஓடினாலும்  அவ்வபோது கிசு கிசுவில் சிக்கி விடுகிறார் முதலில் ஆண்ட்ரியா உடன் இவர் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து தான் இசை அமைக்கும் படங்களின் நடிகைகளுடன்  புகைப்படம் எடுத்துக் கொள்வதால்..

அந்த நடிகைகளுடன் அனிருத் கிசுகிசுக்கப்படுகிறார் இது வழக்கமாக இருந்து வருகிறது ஆனால் அனிருத் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து படம் பண்ணி வருகிறார். இப்படி ஓடிக் கொண்டிருக்கும் அனிருத்  சமூக வலைதள பக்கங்களில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி தற்பொழுது பாட்ஷா ரஜினி கெட்டபில் அனிருத்  புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் பாட்ஷா  ரஜினி போலவே இருக்கிறீர்கள் எனக் கூறி கமெண்ட் அடித்து அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.  இதோ இசையமைப்பாளர் அனிருத்  பாட்ஷா ரஜினி போல் இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

aniruth
aniruth

Leave a Comment