நண்பனுக்காக வளர்த்து விட்ட தனுஷை தூக்கி எறிந்த அனிருத்.. இதெல்லாம் ஒரு பொழப்பா..

aniruth
aniruth

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஜொலிப்பவர் தனுஷ். இவர் தனது திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் மறுபக்கம் திறமை இருப்பவர்களை தூக்கிவிட்டும் வருகிறார் அந்த வகையில் சிவக்கார்த்திகேயன், அனிருத் என சொல்லிக்கொண்டே போகலாம்..

அந்த அளவிற்கு திறமையானவர்களை வளர்த்து விட்டு உள்ளார். குறிப்பாக அனிருத்தை இவர் தான் வளர்த்து விட்டுள்ளார் ஆரம்பத்தில் தனுஷின் வீட்டில் ஒரு மூலையில் கீபோர்டு வாசித்துக் கொண்டிருந்தார் பிறகு தான் நடித்த 3 திரைப்படத்தில் இசையமைப்பாளராக இவரை உள்ளே இழுத்துப் போட்டார் இவர் இசையமைத்த 3 திரைப்படம்..

மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களும் பெரிய ஹிட் அடித்தன. இந்த படத்தை தொடர்ந்து தனுஷின் பல படங்களுக்கு இசை அமைத்தாலும் ஒரு கட்டத்தில் அவரையும் தாண்டி டாப் நடிகரான அஜித், விஜய், ரஜினி, கமல் போன்றவர்கள் படங்களுக்கு இசையமைத்து தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை அனிருத் வைத்திருக்கிறார்.

அனிருத்துக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன இதனால் ஒரு சில டாப் நடிகர்களின் படங்களை கைகழுவி விடுகிறார் அப்படி தன்னை வளர்த்து விட்ட தனுஷின் 50 வது திரைப்படத்திற்கு  அனிருத் இசையமைக்க வில்லை அதற்கு பதிலாக கவின் படத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார் இதற்கு காரணமும் இருக்கிறது கவின் படத்தை இயக்குனர் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்குகிறார்.

அனிருத் நெருங்கிய நண்பர் என்பதால் இந்த படத்தில் இசையமைக்க ஒத்துக் கொண்டாராம் மேலும் அனிருத் விளம்பர படங்கள், வெளிநாடு  நாடுகளில் நடத்தப்படும் இசை வெளியீட்டு விழா என அனைத்திருக்கும் சதீஷ் தான் டான்ஸ் மாஸ்டர் எனவே அவருக்கு உதவி செய்யும் வகையில் அந்த படத்திற்கு அனிருத் ஓகே சொல்லி உள்ளாராம்.. இந்த தகவல் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது.