எட்டு வருட சண்டையை மறந்த முருகதாஸ் மீண்டும் முன்னணி நடிகருடன் கைகோர்ப்பு அடுத்த படம் பற்றி என அதிரடி தகவல்.

0

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் பெரும்பாலும் ரசிகர்களை கவரும் வகையில் பல படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் இறுதியாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து தர்பார் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.இப்படம் சொல்லுமளவிற்கு வெற்றியை பெறவில்லை.இதனை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் சொல்லுமளவிற்கு பேசப்படவில்லை எனவே தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால் தற்போது கண்டிப்பாக வெற்றி படத்தை ரசிகர்களுக்கு தரவேண்டும் என்ற கட்டாயத்திற்கு முருகதாஸ் தள்ளப்பட்டுள்ளார்.

இவர் தொடர்ந்து இரண்டு படங்களும் தோல்வி அடைந்ததால் இவரின் படத்தில் நடிகர்கள் நடிப்பதற்கு கொஞ்சம் தயங்கி வருகிறார்கள். எனவே ஹீரோ கிடைக்காமல் முருகதாஸ் தள்ளாடி வருகிறார்.

இவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவதாக பேசப்பட்டது ஆனால் அது முற்றிலும் வதந்தி கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இவர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்ருக்கு அனிமேஷன் திரைப்படத்தை இவர் இயக்க உள்ளார்களாம்.

surya 001
surya 001

அந்தப் படத்தில் சூர்யாவை வைத்து முருகதாஸ் இயக்க உள்ளாராம்.இதற்கு முன்பு இவர் கஜினி, ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்களை சூர்யா நடிப்பில் தான் இயக்கி இருந்தார்.பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக சூர்யாவின் படத்தை இயக்கமல் இருந்து உள்ளார் முருகதாஸ்.

தற்போது இவர் சூர்யா வைத்து இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகிதும் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.