ஏ ஆர் முருகதாஸின் தீனா படத்தை நிராகரித்த தயாரிப்பாளர்.! பிறகு எப்படி உருவானது தெரியுமா.?

Dheena : அஜித் நடிப்பில் வெளியாகிய தீனா திரைப்படம் எப்படி உருவாகியது என ஏ ஆர் முருகதாஸ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அஜித், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தீனா இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் தீனா திரைப்படத்தில் தான் அஜித்திற்கு தல என்ற பெயரும் வைக்கப்பட்டது. தீனா திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் பல திரைப்படங்களை ஏ ஆர் முருகதாஸ் இயக்குனர் என செய்திகள் வெளியானது ஆனால் கடைசி வரை இது நடக்கவில்லை..

கடந்தா சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் தீனா திரைப்படம் உருவான விதம் குறித்து ஏ ஆர் முருகதாஸ் கூறியுள்ளார்.

நிக் ஆர்டிஸ்ட் சக்கரவர்த்தி அவர்களிடம் ஏ ஆர் முருகதாஸ் ஒரு கதை கூறியதாகவும் ஆனால் அந்த சக்கரவர்த்தி அமர்க்களம் திரைப்படத்தை எடுத்து ரிலீஸ் செய்து கொண்டிருந்தார் அந்த சமயத்தில் தான் ஏ ஆர் முருகதாஸ் தீனா பட கதையை சக்கரவர்த்தி அவர்களிடம் கூறியுள்ளார். அதற்கு சக்கரவர்த்தி கதை அருமையாக இருக்கிறது ஆனால் இப்பொழுது தான் அஜித் அமர்க்களம் என்ற அடிதடி கதாபாத்திரத்தை முடித்திருக்கிறார் மீண்டும் அதே போல் கதை வேண்டாம் என தீனா படத்தை நிராகரித்துள்ளார்.

உங்களுக்கு நிறைய கதை எழுதும் அறிவு இருக்கிறது அதனால் வேறு ஒரு கதையை எடுத்துக் கொண்டு வாருங்கள் எனக் கூறிவிட்டார்.  அமர்க்களம் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்ததை பின்பு ஒரு நாள் நிக் ஆர்ட் சக்கரவர்த்தி என்னை மீண்டும் அழைத்தார் மீண்டும் அந்தக் கதையை சொல்லுங்கள் எனக் கூறினார் இதில் இரண்டு மூன்று விஷயங்களை எனக்கு திருப்தி இல்லை இதை மட்டும் மாற்றி விட்டு சொல்லுங்கள் என சொன்னார்.

உடனே சிட்டிசன் திரைப்படத்தை தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி ஆரம்பித்தார் நானும் கதை டிஸ்கஷனில் இருந்து வந்தேன். ரெட்டை ஜடை வயசு தயாரிப்பாளருக்கு அஜித் இன்னொரு படத்தில்  நடித்து தருவதாக கூறியிருந்தார் அவர் பெயர் கார்த்திக் அஜித்தின் நம்பன் தான் ஆனால் இயக்குனரின் நடவடிக்கை சரியில்லாததால் வேறொரு இயக்குனரை தேடிக் கொண்டிருந்தார். அப்பொழுது சக்கரவர்த்தி என்னுடைய பெயரை அவரிடம் கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் நான் சொன்ன கதையையும் கூறியுள்ளார்.

பின்பு இருவரும் என்னை அழைத்தார்கள் நானும் கதையை சொன்னேன் வழக்கமாக ஆடி மாதத்தில் எந்த ஒரு விஷயத்தையும் புதிதாக தொடங்க மாட்டார்கள் நான் கதை சொன்னபொழுது ஆடி மாதத்திற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது ஆனால் ஆடி பிறப்பதற்கு முன்பே அட்வான்ஸ் தொகையாக ஆயிரத்து ஒரு ரூபாய் அந்த தயாரிப்பாளர் கொடுத்தார் அதாவது ஒரு நாயகன் கிடைத்து படத்தை ஆரம்பிக்க பல நாட்கள் ஆகும் என்பதால் நான் கதையை பேப்பரில் கூட எழுதவில்லை.

ஒரு வாரத்திற்குள் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என கூறி விட்டார்கள் இரவு பகலாக உட்கார்ந்து அந்த கதையை எழுத ஆரம்பித்தேன். மிகவும் குறைந்த நேரம் இருந்ததால் ரா பகலாக எழுதினேன் முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்றால் அங்கு யாருமே கிடையாது நடிகர் அஜித் மட்டுமே இருந்தார். எந்த ஒரு இயக்குனரும் வெறும் ஹீரோவை வைத்து படத்தை ஆரம்பித்திருக்க மாட்டார்கள்  என்று நினைக்கிறேன். அந்தத் திரைப்படத்தை தொடங்கியதும் மூச்சு விட கூட நேரமில்லை அவ்வளவு வேலை இருந்தது.

அப்பொழுது கண்ணதாசன் சொன்ன வரிகள் தான் எனக்கு நினைவிற்கு வந்தது “முதலில் ஒப்புக் கொள் பிறகு கற்றுக்கொள்” என்ற வரிதான். ஏழு நாட்களில் கதையை வேகமாக எழுதி முடித்தேன் அதுமட்டுமில்லாமல் பகலில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இரவில் கதையை எழுதுவேன் இப்படி அயராது உழைத்து தான் தீனா திரைப்படம் வெளியானது. ஆடியில் ஆரம்பித்த படம் பொங்கலுக்கு வெளியானது அப்பொழுது ஒரு பண்டிகை நாட்கள் என்றாலே ஏழு எட்டு திரைப்படங்கள் வெளியாகும் நான் பழனி கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்று இருந்தேன் தன்னந்தனியாக தான் சென்று அங்கு ஒரு அரங்கில் 12 மணி காட்சி தீனா படத்தை பார்த்தேன்.

ரசிகர்களின் ஆரவாரத்தை கண்டு எனக்கு மெய் சிலிர்த்தது கண்டிப்பாக இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வசூல் இருக்கும் என என் மனதிற்குள் தோன்றியது படத்தை பார்த்து விட்டு சென்னையில் இருக்கும் என் நண்பர்களிடம் பேசினேன். படம் வெளியான முதல் வாரத்திலேயே முதலீடு செய்த மொத்த பணத்தையும் பெற்று தந்தது மறு வெளியீட்டில் நன்றாக ஓடியது பின்பு கிடைத்த அனைத்து பணமும் லாபமாக மாறியது. தீனா திரைப்படத்தின் வெற்றியால்தான் ரமணா திரைப்பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் வாழ்வில் மறக்க முடியாத பயணம் என்றால் அது தீனா தான் என ஏ ஆர் முருகதாஸ் பேசியுள்ளார்.