மீண்டும் தமிழ் சினிமாவுக்கே ஆட்டம் காட்டப் போகும் முருகதாஸ்..! இந்த முறை யார் தடுத்தாலும் வெற்றி நிச்சயம்..!

தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் முருகதாஸ் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் ஒரு காலத்தில் தளபதி விஜய் வைத்து பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் கத்தி துப்பாக்கி சர்க்கார் போன்ற பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஏ கே தர்பார் திரைப்படம் ஆனது மிகப்பெரிய அளவு தோல்வியை சந்தித்தது என்று சொல்லலாம்.

இவர் இந்த தோல்வியின் காரணமாக அடுத்ததாக தளபதி விஜய் வைத்து அவர் இயக்க இருந்த திரைப்படமும் இயக்க முடியாமல் போய்விட்டது இதனால் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என இயக்குனர் முருகதாஸ் அவர்கள் ஒரு முடிவோடு உள்ளாராம்.

இதன் காரணமாக நமது இயக்குனர் அவர்கள் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி வருவதாகவும் அந்த வகையில் தற்பொழுது அவருடைய இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற கஜினி என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கொண்டு செல்லலாம் என முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் நடிப்பதற்கு சூர்யா மிகவும் ஆர்வமாக உள்ளார் என சினிமா வட்டாரத்தில் அரசியல் பரிசாக செய்திகள் வெளியாகி உள்ளது ஆனால் கஜினி இரண்டாம் பாகம் உருவாகுமா? இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

gajini-1
gajini-1

Leave a Comment