அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில் இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது, படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், மேலும் படத்தின் தயாரிப்பாளர் இந்த மாதம் முழுவதும் பிகில் அப்டேட் வந்து கொண்டே இருக்கும் என அறிவித்திருந்தார்கள்,.
அதேபோல் சமூக வலைதளங்களில் பிகில் படத்திலிருந்து வெளியாகியுள்ள வெறித்தனம் பாடல் வைரலாகி வருகிறது, கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்..

இந்த நிலையில் விஜய்யின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது, நேற்று நட்சத்திர ஹோட்டலில் முரசொலி நிறுவனத்தின் இயக்குனர் முரசொலி செல்வத்தின் பேத்தி நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் மு க ஸ்டாலின் மற்றும் அவரது மகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் அதே போல் விஜய்க்கும் இந்த விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதனால் விஜய் தனது மனைவியுடன் அந்த விழாவில் பங்கேற்றுள்ளார் அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

EXCLUSIVE VIDEO of #Thalapathy #Vijay from a wedding function at Leela Palace. @ActorVijayFP #BigilTamilMovie pic.twitter.com/Oubz1YCYn2
— #BIGIL (@BigilTamilMovie) September 2, 2019