IPL -ல் போட்டி தள்ளிவைக்கப்பட்ட பிறகும் மும்பை இந்தியன்ஸ் அணியை புகழ்ந்து தள்ளும்.! பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்.

இந்தியவில் மிக சிறப்பாக நடத்தப்படும் ஒரு தொடரான ஐபிஎல் போட்டி கோலாகலமாக இந்த சீசனும் நடந்தது. ஆனால் இந்த தடவை கொரோனா இரண்டாம் அலை வீசுவதால் சற்று பாதுகாப்புடன் தொடங்கியது இருப்பினும் இதில் விளையாடும் வீரர்களுக்கும், பயிற்சியாளர் மற்றும் பஸ் ஊழியர்களுக்கு தோற்று பரவியதால் பிசிசிஐ உடனடியாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

இது கிரிக்கெட் ரசிகர்களை தற்போது சோகம் அடைய செய்து இருந்தாலும் ஆனால் வீரர்கள் மிக முக்கியம் என்பதால் அவர்கள் நலன் கருதி இந்த செயலை எடுத்துள்ளது பிசிசிஐ. இதற்கு ரசிகர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளனர்.

இதனால் வெளிநாட்டு வீரர்கள் தனது சொந்த ஊருக்கு சென்றனர் அந்தநாட்டில் குவாரண்டன் டைம் முடிந்த பிறகு தனது வீட்டுக்குச் செல்வார்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி உடனடியாக ஒரு புதிய நடவடிக்கையை எடுத்து இச்செயல் அனைவரிடத்திலும் நற்பெயரையும் பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. அப்படி என்ன செய்ய உள்ளது என்றால் தங்களது அணியில் இருக்கும் வெளிநாட்டு வீரர்களை “சார்ட்டர்” விமானத்தின் மூலம் அந்த சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் விளையாட  மற்ற அணி இருக்கும் வெளிநாட்டு வீரர்களும் இந்த விமானத்தில் சேர்ந்து பயணிக்க அழைப்பு விடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி போலவே அந்த அணி நிர்வாகமும் யோச்சி உள்ளதால் தற்போது பலரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

Leave a Comment