55 பந்துகள் 158 ரன்கள் விளாசிய மும்பை இந்தியன்ஸ் அதிரடி வீரர்.!வைரலாகும் வீடியோ!!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா ஒரு புதிய விவாதப் பொருளாக மாறியுள்ளார். தற்பொழுது பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) அணிக்கு எதிரான ரிலையன்ஸ் 1 இன் அரையிறுதி போட்டியில் ஹார்டிக் பாண்ட்யா அவர்கள் 55 பந்துகள் 158 ரன்கள் எடுத்து எதிர் அணி பந்து விச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிளனார் அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தும் படைத்தார்.

இந்த போட்டியின் பொழுது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆடுகளத்தை ஆக்கிரமித்து கொண்டு அரங்கத்தில் “ஹார்டிக், ஹார்டிக்” என்று கோஷமிட்டனர். சில ரசிகர்கள் கூட ரிலையன்ஸ் 1 டிரஸ்ஸிங் ரூம் அருகே வந்து தங்கள் நட்சத்திர கிரிக்கெட் வீரரின் பார்வையைப் பெற்றனர்.

வாரத்தின் தொடக்கத்தில் நடந்த குரூப் சி போட்டியில் சிஏஜிக்கு எதிராக 105 ரன்கள் எடுதிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மிண்டும் தனது அதிரடியை காட்டியுள்ளார் ஹார்டிக்.இந்தநிலை மேலும் தொடரிந்தால் இந்திய அணிக்கும்,மும்பை இன்டியான்ஸ் அவர் சிறந்த பங்குளிப்பை அள்ளிப்பர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில் வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 26 வயதான நட்சத்திர கிரிக்கெட் வீரர் அணி இந்தியாவில் சேர உள்ளதாக என்.டி.டி.வி விளையாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது ரசிகர்கள் இந்திய அணிக்க விளையாட வேண்டுமென கூறிவருகிறார்கள்.

Leave a Comment