இளைய தளபதி விஜயை காப்பியடிக்கும் முகன் ராவ்.! புகைப்படத்தை ஷேர் செய்யும் ரசிகர்கள்.!

சின்னத்திரை மூலம் மக்களுக்கு அறிமுகமாகி தற்போது தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருபவர் தான் முகன் ராவ் இவர் பிக் பாஸ் 3யில் போட்டியாளராக பங்குபெற்று டைட்டிலை வென்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு இவர் மக்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார் என்று தான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இவர் பிக்பாஸில் செய்த அனைத்து விஷயங்களும் மக்களுக்கு பிடித்து விட்டது.

மேலும் பாடுவதில் இவர் அதிகம் ஆர்வம் காட்டுவார் என்பது நமக்கு தெரிந்ததுதான் அந்த வகையில் பார்த்தால் இவர் பல ஆல்பங்களை வெளியிட்டு தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் தற்போது கோலிவுட்டில் இவர் கால்பதித்து வலம் வருவது இவரது ரசிகர்களுக்கு மிகவும் பெருமையாகத்தான் இருக்கிறது இவரது நடிப்பில் வெற்றி, வேலன் என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இவ்வாறு நடித்து வரும் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைவது மட்டுமல்லாமல் இவர் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இவரது புகைப்படங்களும் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று தற்போதும் வெளியாகியுள்ளது.

ஆம் இந்த புகைப்படத்தில் இவர் பார்ப்பதற்கு இளைய தளபதி விஜய் போல் மிகவும் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார் இளைய தளபதி விஜய் துப்பாக்கி திரைப்படத்தில் எப்படி போஸ் கொடுப்பாரோ அதே போல்தான் இவரும் போஸ் கொடுத்துள்ளார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருகிறார்கள்.

mugan rao
mugan rao

ஆனால் ஒரு சில ரசிகர்கள் எதற்காக விஜய் போலவே போஸ் கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்பி வருவது மட்டுமல்லாமல் பலரும் நீங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment