தனது காதலியுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக்பாஸ் முகேன்ராவ்.! இதோ ரொமான்ஸ் புகைப்படங்கள்

mugenrao celebrating his birthday with her lover photos viral: பிக் பாஸ் சீசன் 3யில் முகேன் ராவ் என்கின்ற போட்டியாளர் மலேசியாவிலிருந்து வந்து கலந்துகொண்டு முதல் பரிசை வென்றார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர்.

மேலும் இவர் நிறைய ஷார்ட் பிலிம் மற்றும் ஆல்பம்  பாடல்களில் நடித்திருந்தார். அது இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது இவரை நடிகை அபிராமி காதலித்தார். ஆனால் இவரோ மிகவும் உறுதியாக நான் மலேசியாவில் இருக்கும் நதியாவை  காதலிக்கிறேன் என தெள்ளத் தெளிவாக கூறியிருந்தார்.

நதியாவை காதலிப்பதாகவும் அவரிடம் இவரின் காதலை பற்றி இன்னும் சொல்லவில்லை என அடிக்கடி பிக்பாஸ் வீட்டில் கூறியிருந்தார். மேலும் இவருக்கு ரசிகர்கள் ஒரு ஆர்மி வைத்திருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் இவர் சொன்ன அன்பு ஒன்றே அனாதை என்கின்ற வார்த்தை மிக பெரிய அளவில் பிரபலமானது.

இந்த நிலையில் இன்று முகேன் ராவ் தனது காதலி நதியாவுடன் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். முகேன் ராவ்வின் காதலி யாஸ்மின் நதியா முகேன் ராவ்விற்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி சில எமோஷனலான பதிவுகளையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

mugen
mugen
yasminnadiah_1
yasminnadiah_1
yasminnadiah_122
yasminnadiah_122

Leave a Comment