முதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பது தளபதி விஜய்யா.? ஷங்கர் சொன்ன சூப்பர் பதில்.!

0
mudhalvan
mudhalvan

1999 ஆம் ஆண்டு ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி திரைப்படம் முதல்வன்,  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது, இந்த திரைப்படத்தில் அரசியல் சார்ந்த கதை களமாக இருந்தது அதனால் ஊழலை எப்படி ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதை வெட்டவெளிச்சமாக காட்டியிருந்தார்கள். இந்த முதல்வன் படத்தில் முதலில் ரஜினியிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் அரசியல் சார்ந்த கதை என்பதால் நடிக்க மறுத்துவிட்டார் அதன்பிறகு இந்த கதை விஜய்யிடம் சென்றது ஆனால் விஜய் அப்பொழுது பிஸியாக இருந்ததால் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் படங்களை இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் என எடுக்க ஆரம்பித்து விட்டார்கள் அதேபோல் சங்கரும் தனது படங்களை இரண்டாம் பாகமாக இயக்க முடிவு எடுத்துவிட்டார் ஏற்கனவே ரஜினியை வைத்து எந்திரன் 2.0 இரண்டாம் பாகத்தை இயக்கினார் அடுத்ததாக கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சங்கரிடம் முதல்வன் இரண்டாம் பாகம் எப்போது என கேட்டார்கள் அதற்கு பதிலளித்த ஷங்கர், முதல்வன் இரண்டாம் பாகத்திற்கான கதை உருவாக வேண்டும் அதன்பிறகு அந்த கதைக்கு யார் பொருத்தமான நடிகர் அவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறியிருந்தார், இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது இந்த நிலையில் முதல்வன் இரண்டாம் பாகத்தில் விஜய் தான் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது, இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.