ஒரே நாளில் இரண்டு காரை வாங்கிய காமெடி நடிகரின் மகள்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஒரு சில கதாபாத்திரங்களை மக்களால் மறக்க முடியாது அந்த வகையில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் எம்எஸ் பாஸ்கர்.

இவர் தான் நடிக்கும் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டதாக பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் அவரின் மகள் தன்னுடைய அப்பா பட்ட கஷ்டங்களை ஒவ்வொன்றாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது என் வீட்ல எனக்கும் என் தம்பிக்கும் பண்டிகை நாட்களில் புது துணி வாங்கணும் என்பதற்காக என்னுடைய அப்பாவும் அம்மாவும் புது துணி கூட எடுத்துக்க மாட்டாங்க. சொந்த வீடு இல்லாம அடுத்த நாள் எங்க தங்க போகிறோம் என்று தெரியாமல் கூட நிறைய நாட்கள் இருந்திருக்கும். ஒரே நேரத்துல இரண்டு கார் வாங்குற நிலைமைக்கு வந்து இருக்கோம்னா அதுக்கு பின்னாடி கடினமாக உழைத்த அப்பாவுக்கும் சிக்கனமாக செலவு செய்த அம்மாவுக்கும் கிடைத்த வெற்றி தான் இது.

தற்பொழுது எம்எஸ் பாஸ்கரின் மகள் இரண்டு கார்களை வாங்கியுள்ளதாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.