தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித்குமார். சினிமா உலகில் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் அவரது மார்க்கெட் எப்பொழுதும் உச்சத்தில் இருக்க காரணம் அவரது ரசிகர்கள் தான் என கூற வேண்டும் அஜித்தின் படங்கள் பிடித்திருந்தாலும் சரி, பிடிக்கவில்லை என்றாலும் சரி ரசிகர்கள் பார்த்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அதை ஒரு கட்டத்தில் புரிந்து கொண்ட அஜித் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் வலிமை படம் கூட 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது அதனை தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இரண்டாவது கட்ட சூட்டிங் கூட வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது.

ஏகே 61 திரைப்படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நடிகர் அஜித்குமார் அடுத்ததாக நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து தனது 62 ஆவது திரைப்படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

அஜித் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில காரணங்களால் ஒரு சில முக்கிய படங்களை கைவிட்டு உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்து கொண்டு தான். அந்த வகையில் அஜித் நடிப்பதாக சொல்லி போஸ்டர் எல்லாம் வெளியிட்டு பின் கடைசி நேரத்தில் நடிக்க முடியாமல் கைவிடப்பட்ட படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.

சாருமதி, நியூ, நந்தா, இதிகாசம், ஏறுமுகம், மகா திருடா, மிரட்டல் போன்ற படங்களில் நடிப்பதாக சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் சில காரணங்களால் அஜித் விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதோ அந்த போஸ்டரை நீங்களே பாருங்கள்.


