மகா மட்டமான கிளைமாக்ஸ் காட்சியால் திரையரங்கில் ரசிகர்களை எழுந்து ஓட வைத்த திரைப்படங்கள்.! அட லிஸ்டில் இந்த முன்னணி நடிகர் படமும் இருக்கா.!

தமிழ்சினிமாவில் வருடத்திற்கு 200 திரைப்படங்களுக்கு மேல் வெளியாகின்றன ஆனால் அதில் அனைத்து திரைப்படங்களும் வெற்றி அடைகின்றன என கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும் அதிலும் நல்ல கதை உள்ள திரைப்படங்கள் முன்னணி நடிகர்களின்  திரைப்படங்கள் ஹிட்டடித்த விடுகின்றன.

ஆனாலும் ஒரு சில திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து பின் தோல்வியடைந்த திரைப்படங்களும் இருக்கின்றன அவற்றில் சில திரைப்படங்களை இங்கே காணலாம்.

மாயக்கண்ணாடி – இந்த திரைப்படத்தை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த சேரன் தான் இயக்கியிருந்தார். படத்தில் ஹீரோயினாக சேரன் சலூன் கடையில் வேலை பார்ப்பார் அதேபோல் ஹீரோயினும் ஒரு சலூன் கடையில் தான் வேலை பார்க்கிறார். இருவரும் எப்படியாவது ஆடம்பர வாழ்க்கையை வாழ வேண்டுமென சம்பாதிக்க வேண்டுமென எல்ஐசி ஏஜென்ட் ஆகவும் சினிமாவிலும் வேலைகளை செய்து பார்ப்பார்கள்.

mayakkannadi
mayakkannadi

ஆனால் அவர்களால் அதில் முன்னேறவே முடியாது அனைத்து முயற்சியும் தோல்வியில் தான் அடையும் அதனால் மீண்டும் சலூன் கடைக்க திரும்பி வந்துவிடுவார்கள். இந்த திரைப்படத்தில் உழைத்து வாழ வேண்டும் என்ற கான்செப்ட்டை அவர்கள் வெளிக்காட்டவே இல்லை அதனால் இந்த திரைப்படம் பெரும் தோல்வியடைந்தது. ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடம் எக்கச்சக்க  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

குருதிப்புனல் – இந்த குருதிப்புனல் திரைப்படத்தில் கமலஹாசன் நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள் இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமலஹாசன் சேவையை பார்த்து பாராட்டி தங்கப்பதக்கம் கொடுப்பார்கள் அந்த தங்கப்பதக்கத்தை எடுத்துக்கொண்டு அவருடைய மகனின் காரில் வைக்க செல்வார்.

அப்பொழுது நாசர் கமலஹாசனின் மகனிடம் சண்டை போடுவார் இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் கமலஹாசன் நாசரை கொன்றுவிடுவார் அப்போதே படம் முடிந்து விடும் ஆனால் மீண்டும் தேவையில்லாத காட்சிகளால் இந்த திரைப்படம் தோல்வியை தழுவியது.

அயோக்கியா – விஷால் நடிப்பில் வெளியாகிய அயோக்கிய திரைப்படமும் கிட்டத்தட்ட தோல்வி திரைப்படம்தான் ஏனென்றால் அயோக்கிய திரைப்படத்தில் முதலில் வில்லத்தனமான போலீஸாக விஷால் நடிப்பார் பின்பு திருந்தி நல்லவனாக மாறுவார். இந்த திரைப்படத்தில் குற்றவாளிகள் தப்பிக்க கூடாது என்பதற்காக தானும் குற்றவாளி தான்  என பழியை தன் மீதும் போட்டுக் கொள்வார்.

ayogya
ayogya

அதாவது அந்த குற்றவாளிகள் தப்பிக்க கூடாது என்பதற்காக விஷால் நீதிமன்றத்தில் தானும் அவர்களின் நண்பர் என கூண்டில் ஏறி கூறுவார். அதன் பிறகு இவருக்கும் அந்த தண்டனை வழங்கப்படும். ஆனால் போலீஸ் சாட்சி செல்லாது என்பதை மறந்து இந்த திரைப்படத்தை முடித்து இருப்பார்கள் அதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தோல்வியடைந்து திரைப்படம்.

சாமி 2  விக்ரம் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் சாமி 2 திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது அதனால் இரண்டாம் பாகத்தை ஹரி அவர்கள் இயக்கினார்கள். படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் ஏண்டா படத்திற்கு வந்தோம் என தலையில் அடித்துக் கொள்ளும் அளவிற்கு பல காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமில்லாமல் சில மணி நேரத்திற்கு பிறகு தான் விக்ரம் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெரியும் அந்த அளவு குழப்பமான கதையை இயக்கியுள்ளார் ஹரி. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் விக்ரம் பஞ்ச் வசனம் பேசுவதாக நான் சாமி இல்ல பூதம் எனக்கூறும் வசனங்களுக்கு ரசிகர்கள் தலையில் அடித்துக் கொண்டுதான் வெளியே வந்தார்கள் அந்த அளவு மோசமாக இந்த திரைப்படம் அமைந்துவிட்டது.

saami-2
saami-2

Leave a Comment