கமலஹாசன் வில்லனாக நடித்த திரைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் வில்லன்கள் என்றாலே நாம் எல்லோருக்கும் நினைவில் வருவது பொன்னம்பலம்,ரகுவரன், பிரகாஷ்ராஜ் இவர்கள்தான். ஆனால் கமல்ஹாசன் அவர்கள் ஒரு சில திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார் அந்த திரைப்படத்தை  பற்றிதான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

குமாஸ்தாவின் மகள் : இந்த திரைப்படத்தை ஏ பி நாகராஜன் அவர்கள் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் சிவகுமார், ஆர்த்தி, கமலஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் கமலஹாசன் அவர்கள் ஒரு பயங்கர வில்லனாக நடித்துள்ளார்.

அடுத்த திரைப்படம் 2001ம் ஆண்டு வெளியான ஆளவந்தான் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் மாறுபட்ட இரண்டு வேடத்தில் நடித்துள்ளார். இதில் ஒரு கதாபாத்திரம் கதாநாயகனாகவும், மற்றொரு கதாபாத்திரம் வில்லனாகவும் நடித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

aalavandhan
aalavandhan

2008ஆம் ஆண்டு வெளியான தசாவதாரம் இந்த திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் அவர்கள் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் மாறுபட்ட 10 வேடத்தில் கமல்ஹாசன் அவர்கள் நடித்துள்ளார்.அதில் ஒரு கதாபாத்திரம் வில்லனாகவும் நடித்துள்ளார்.

அடுத்ததாக கமல் வில்லனாக நடித்த திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள் என்ற திரைப்படம்தான். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மற்றும் ஸ்ரீதேவி இவர்கள் இணைந்து நடித்த திரைப்படம் தான் சிகப்பு ரோஜாக்கள். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு பயங்கர வில்லனாக நடித்துள்ளார்.

siappu rojakkal
siappu rojakkal
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment