நடிகனாக மட்டும் இல்லாமல் வில்லனாக நடித்து மிரட்டிய அர்ஜுன்.! எந்தெந்த திரைப்படத்தில் தெரியுமா.?

ஆக்சன் கிங் அர்ஜுன் நாம் எல்லோருக்கும் ஹீரோவாக தான் தெரியும் ஆனால் இவர் வில்லனாக நடித்த திரைப்படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

இதில் முதல் திரைப்படம் கண்ணோடு காண்பதெல்லாம், இந்தத் திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியானது. இந்தத் திரைப்படத்தில் அர்ஜுன் அவர்கள் வில்லனாக நடித்துள்ளார்.

kannodu kanbathellam
kannodu kanbathellam

அடுத்த திரைப்படம் சின்னா 2005ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தத் திரைப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக சினேகா அவர்கள் நடித்துள்ளார்.

கர்ணா : இந்தத் திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில்  அர்ஜுன் அவர்கள் மாறுபட்ட இரண்டு வேடத்தில் நடித்துள்ளார். இதில் ஒரு வேடத்தில் கதாநாயகனாகவும் மற்றொரு வேடத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

karnaa
karnaa

விஷால் அவர்கள் நடிப்பில் வெளியான இரும்புத்திரை என்ற திரைப்படத்தில் அர்ஜுன் அவர்கள் பயங்கர வில்லனாக நடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடல் என்ற  திரைப்படத்திலும் அர்ஜுன் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

kadal
kadal

Leave a Comment