2022ஆம் விரைவில் முடிய இருக்கும் நிலையில் இந்த ஆண்டின் கடைசி வாரமான 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கிட்டத்தட்ட ஆறு தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளது அதில் நான்கு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் டிசம்பர் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தினை ஆர் கண்ணன் இயக்கியுள்ள நிலையில் மலையாள படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து டிசம்பர் 30ஆம் தேதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் டிரைவர் ஜமுனா என்ற படம் ரிலீஸ்சாக உள்ளது.
இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு டிசம்பர் 30ஆம் தேதி ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார். இவரை எடுத்து ஜிபி முத்து, மொட்டை ராஜேந்திரன், சிவா, தர்ஷா குப்தா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
மேலும் டிசம்பர் 30ஆம் தேதி லைக் நிறுவனத்தின் தயாரிப்பில் த்ரிஷா ராங்கி என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த திரைப்படமும் வெளியாக தயார் நிலையில் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலைகள் தற்போது வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் நடித்த செம்பு என்ற திரைப்படமும், விஜய் ஆண்டனி நடித்த முடித்துள்ள தமிழரசன் என்ற திரைப்படமும் டிசம்பர் 30ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்த ஆண்டின் கடைசி இரண்டு நாளில் மொத்தம் ஆறு திரைப்படங்களில் நான்கு திரைப்படங்கள் கதாநாயகிகள் நடித்துள்ள திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.