சம்மரில் சரவெடி வெடிக்க வரும் நடிகர்களின் திரைப்படங்கள்.! லிஸ்ட் பெருசா போகுது..

கொரோனா தொற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது தமிழ் சினிமா தற்போது தான்  திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் திரைப்படங்களின் வரவேற்பும் ஒவ்வொன்றாக வெளியில் வருகின்றனர் முதலில் கடந்த பொங்கலன்று மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது அதை தொடர்ந்து ஒவ்வொன்றாக படங்கள் வெளியாகி கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இது ஒரு பக்கமிருக்க சம்மரில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க மேலும் பல திரைப்படங்களில் டார்கெட் செய்து உள்ளன.

தமிழ் சினிமாவில் இருந்து வெளியாக உள்ள திரைப்படங்கள் லிஸ்ட் தற்போது பார்ப்போம்.

1.ஏப்ரல் 2ஆம் தேதி கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள சுல்தான். இத்திரைப்படம் வரைவில் வெளியாக உள்ளது இப்படத்தில் அவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

2.படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். படம் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து ஏப்ரல் 9ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் கர்ணன். இத்திரைப்படத்தில் இவருடன் இணைந்து மோகன்லால் மற்றும் முன்னணி ஜாம்பவான்கள் பலர் நடித்துள்ளனர் இந்த படமும் நிச்சயம் வெற்றிப்படமாக மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

3.அதன்பிறகு ஏப்ரல் 14 விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படமும் அதன் பின் 23-ம் தேதியை சத்யராஜ் சசிகுமார் நடிப்பில் உருவாகி உள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படமும் வெளியாக உள்ளன இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமான  தலைவி படமும் வெளியாக உள்ளது.

மறுமுனையில் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன், ஆர்யா திரைப்படங்களும் வெளியாக உள்ளன.

4. சுந்தர் .சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் அரண்மனை 3 இந்த படம் மே மாதத்தில் வெளிவரும் என கூறப்படுகிறது.

5. அதே போல சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படமும் மே மாதம் வெளிவரும் என உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

6. இவர்களை தொடர்ந்து விஜய் சேதுபதியின் அடுத்த 4 திரைப்படங்களும் சம்மரில் வெளிவர உள்ளன விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம், துக்ளக் தர்பார், மாமனிதன் ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன சம்மரில் விஜய் சேதுபதியின் நான்கு திரைப்படங்கள் வெளியாகியுள்ளதால் சம்மரில் சூடுபிடிக்கும் என தெரியவருகிறது.

Leave a Comment