இரட்டை வேடத்தில் அஜித் மிரட்டி விட்ட திரைப்படங்கள்.! தேவாவாக தம்பி மனைவியை அடைய நினைத்த அஜித்

Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர் அஜித் குமார். இவர் இதுவரை இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக இருந்து வந்துள்ளன. அஜித் மொத்தம் 7 படங்களில் இரட்டை வேடம் போட்டு நடித்துள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

வாலி : எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப் படத்தில் விவேக், சிம்ரன், ஜோதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். படத்தில் அஜித் சிம்ரனை காதலித்து கல்யாணம் செய்து கொள்வார் ஆனால்  இன்னொரு அஜித் (தேவா) வாய் பேச மாட்டார் ஆனால் குறுக்கு வழியில் சென்று எப்படியாவது சிம்ரனை அடைந்துவிட வேண்டும் என பல தடவை திட்டம் போடுவார். கடைசியாக அவர் ஆசை நிறைவேறியாதா என்பதுதான் படத்தின் கதை. படம் வெளிவந்து வெற்றி பெற்றது.

சிட்டிசன் : சரவணா சுப்பையா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் அத்திப்பட்டி என்கின்ற ஊரை அழித்து விடுவார்கள். யார் யார் தப்பு செய்தார்களோ அவரை  கடத்திகிட்டு வந்து அஜித் பழி வாங்குவார் படம் மிரட்டலாக இருந்ததால் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் பெரிய வெற்றியை ருசித்தது. படத்தில் அஜித் இரட்டை வேடம் நடித்திருப்பார்.

வில்லன் : கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் ஒருவர் ஊனமுற்றவராகவும், இன்னொருத்தர் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக வைத்திருப்பார். படம் ஆக்ஷன், காமெடி என இருந்ததால் அப்பொழுது வெளிவந்து பெரிய வெற்றியை பதிவு செய்தது.

அட்டகாசம் : சரண் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ஒரு அஜித் கார் டிரைவிங் ஸ்கூலை வைத்துக் கொண்டு தனது பொழப்பை ஓட்டிக் கொண்டிருப்பார் இன்னொரு அஜித் தூத்துகுடியில் மிகப்பெரிய தாதாவாக இருந்திருப்பார் இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சி மிரட்டலாக இருக்கும் அதே சமயம் காமெடி, ஆக்சன் என இருந்ததால் படம் பெரிய வெற்றியை ருசித்தது.

வரலாறு : கே எஸ் ரவிக்குமாருடன் மீண்டும் கைகோர்த்து அஜித் நடித்த இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க அப்பா – மகன் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு படம் தான். படத்தில் அஜித் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி இருப்பார்.

பில்லா : ரஜினி நடிப்பில் வெளியாகிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை மீண்டும் ரீமேக் செய்து அஜித்தின் நடித்திருந்தார் இதில் வரும் தீம் மியூசிக் மற்றும் அஜித்தின் ஸ்டைல் போன்றவை ரசிகர்கள் மத்தியில் கொண்டாடினர். இந்த  படத்தில் அஜித் வரும் இரண்டு கதாபாத்திரமே ரசிக்கும் படி இருந்தது.

அசல் : சரண் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் காமெடி கலந்த படமாக இருந்தது. படம் வெளிவந்து  ரசிகர்கள் கொண்டாடினாலும் மக்கள் கொண்டாடவில்லை இதனால் சுமாராக ஓடியது.