நடிகர் மனோபாலா இயக்கிய திரைப்படங்கள்.! இந்த திரைப்படங்கள் எல்லாம் இவர் இயக்கியதா என ஆச்சரியப்படும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பணியாற்றி விட்டு நேற்று ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களை விட்டு மறைந்த நடிகர் தான் மனோபாலா இவரின் இழப்பு தாங்க முடியாமல் நிறைய பிரபலங்கள் நேரில் வந்தும் சமூக வலைதள பக்கங்கள் மூலமும் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பார்த்தால் நடிகர் மனோபாலா தமிழ் திரை உலகில் இயக்குனர், தயாரிப்பாளர்,காமெடி நடிகர் போன்ற பன்முக திறமை கொண்டு வலம் வந்தார்.

உடல் நலக்குறைவால் கடந்து சில நாட்களாகவே அவதிப்பட்டு வந்த நடிகர் மனோபாலா நேற்று உயிரிழந்து விட்டார்.மேலும் இவரது இழப்பை தாங்க முடியாமல் தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் கண்ணீர் மல்க வெளியிட்ட பதிவுகளை நாம் பார்த்திருப்போம். அதேபோல் தற்பொழுது நடிகர் மனோபாலா இயக்கிய திரைப்படங்களை பற்றி தகவல் வெளியாகி உள்ளது ஆம் நடிகர் மனோ பாலா நடிகர் பாரதிராஜாவிடம் தனது ஆரம்ப காலகட்டத்தில் உதவியாளராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.

அதன் பின்பு தான் இவர் திரைப்படங்கள் இயக்க ஆரம்பித்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் தற்பொழுது அவர் இயக்கிய திரைப்படங்கள் என்னென்ன என்பது பற்றி வெளியாகி உள்ளது  தமிழ் சினிமாவில் இவர் இயக்கிய முதல் திரைப்படம் தான் ஆகாய கங்கை நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்துள்ளார்கள்.

அதனை தொடர்ந்து பார்த்தால் நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, பாரு பாரு பட்டணம் பாரு, சிறைப்பறவை, தூரத்து பச்சை, ஊர்க்காவலன், எம்புருசன்தான் எனக்கு மட்டும்தான் , மூடுமந்திரம், தென்றல் சுடும், மல்லுவேட்டி மைனர், வெற்றிபடிகள், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், செண்பகத் தோட்டம், முற்றுகை, கருப்பு வெள்ளை, பாரம்பரியம், நந்தினி, அன்னை, சிறகுகள், நைனா போன்ற இந்த திரைப்படங்கள் அனைத்தையும் நடிகர் மனோபாலா இயக்கியதாம்.

manobala
manobala

மேலும் இந்த தகவலை இந்த ரசிகர்கள் பலரும் நீங்கள் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று தான் நாங்கள் ஆசைப்பட்டோம் ஆனால் நீங்கள் எங்களை விட்டு பிரிந்து விட்டீர்கள் என கண்ணீர் மல்க ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment