ஒன்றல்ல இரண்டல்ல 13 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம்.! அதுவும் நம்ம பிரபு படம் எந்த திரைப்படம் தெரியுமா.?

பிரபு ஒரு திரைப்பட நடிகர் ஆவார் இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்களில் தமிழ் மொழி திரைப்படங்கள் தான் அதிகம், நடிகர் பிரபு நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் ஆவார்.

தமிழில் முதன்முதலாக சங்கிலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு பி வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத்தம்பி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை பெற்றார், பிரபு சிவாஜிகணேசன் அளவிற்கு பெரிய புகழ்பெற்ற நடிகர் இல்லை என்றாலும் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.

இந்தநிலையில் பிரபுவின் திரைப்படம் ஒன்று 13 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது, என்னதான் ஆச்சரியப்பட்டாலும் அதுதான் உண்மை, இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் அதிக மொழிகளில் ரீமேக் ஆன திரைப்படமாக கொண்டாடப்படுகிறது, பிரபு, பிரபுதேவா காயத்ரி ரகுராம், அபிராமி, ஆகியோர் நடிப்பில் உருவாக்கிய திரைப்படம் தான் சார்லி சாப்ளின்.

இந்த சார்லி சாப்ளின் திரைப்படம் 13 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது, அதேபோல் ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் இந்த திரைப்படம் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது, இந்த சார்லிசாப்லின் திரைப்படத்தை சக்தி சிதம்பரம் தான் இயக்கியுளளார். சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் இந்த திரைப்படத்தை பற்றி புகழ்ந்து பேசினார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் இரண்டாம் பாகம் வெளியாகி மாபெரும் தோல்வியை தழுவியது அதுமட்டுமில்லாமல் முதல் பாகத்தின் பெயரை கெடுக்கும் வகையில் இந்தத் திரைப்படம் அமைந்ததாக பலரும் விமர்சனம் கூறினார்கள்.

Leave a Comment