நடிகர் மனோபாலாவிடம் இருந்த பழக்கத்தைப் பற்றி கூறிய சினிமா பிரபலங்கள்.! இப்படி ஒரு குணம் இவருக்கு இருந்ததா..

0
manobala
manobala

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் காமெடி கலந்த கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் என்றும் நீங்க இடத்தை பிடித்தவர் தான் நடிகர் மனோபாலா இவர் உடல்நல குறைவால் நேற்று மரணம் அடைந்த செய்தியை கேட்ட பல பிரபலங்களும் அதிர்ச்சியாகி விட்டார்கள் என்றே கூறலாம்.

பிரபலங்களை தவிர்த்து ரசிகர்கள் பலரும் நடிகர் மனோபாலாவின் இழப்பை தாங்க முடியாமல் அவரது புகைப்படங்கள்,வீடியோக்கள் போன்றவற்றையெல்லாம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களது இரங்கலை தெரிவித்து வந்தார்கள்.

அந்த வகையில் பார்த்தால் பல சினிமா பிரபலங்களும் நடிகர் மனோபாலாவின் வீட்டிற்கு வந்து தங்களது இரங்கலை செலுத்தினார்கள் மேலும் கடந்த சில வருடங்களாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நடிகர் மனோபாலா அவர்கள் நேற்று காலை தனது வீட்டிலேயே உயிரிழந்து விட்டாராம். தற்பொழுது நடிகர் மனோபாலாவிடம் இருந்த நல்ல குணங்கள் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகர் மனோபாலா சினிமாவை தாண்டி சமையல் செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவாராம் சினிமா பிரபலங்கள் தனது வீட்டிற்கு வந்தார்கள் என்றால் உடனே தனது கையாலேயே சமைத்து போடுவாராம். அதிலும் அவர் வைக்கும் இட்டலியும்,வத்த குழம்பும் பல சினிமா பிரபலங்களுக்கு அவர் சமைத்தால் மிகவும் பிடிக்குமாம் அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அவர் தனது சமையல் திறமையை வெளிப்படுத்தி உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

மேலும் இதுபோன்ற பல விஷயங்களில் அவரது நல்ல குணங்களை அடிக்கடி பார்க்க முடியும் என சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் நடிகர் மனோபாலா தான் இருக்கும் இடத்தில் தன்னை சுற்றி உள்ளவர்களையும் எப்பொழுதுமே சந்தோஷமாக வைத்துக் கொள்வார் என இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

manobala
manobala