பட வாய்ப்பு இல்லாததால் சோப்பு விற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார் பிரபல நடிகை.! எனக்கு மெகா சீரியலில் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என பேட்டி..

aishwariya-pasgaran
aishwariya-pasgaran

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக பல சிறந்த நடிகை தற்போது திரைப்படம் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சோப்புவிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவரே பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

பொதுவாக ஒரு நடிகை சினிமாவில் தொடர்ந்து அடுத்து வருவது கேள்விக்கு ஒரே ஒரு விஷயம்தான்.  இந்த வகைகள் 90காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன்.  சமீபப்பேட்டி ஒன்றில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் மெகா சீரியல் ஒன்று கிடைத்தால் பெரும் உதவியாக இருக்கும் என்றும் பேட்டியளித்துள்ளார்.

பொதுவாக சினிமாவில் பிரபலமடைந்த நடிகர் நடிகைகள் தங்களது வாரிசுகள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல கேரக்டர்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் தான் நடிகை லட்சுமி.

இவருடைய மகள் ஐஸ்வர்யா பாஸ்கரன் 90களில் சில திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.  ஆனால் சில நாட்கள் கழித்தே படவாய்ப்புகள் பெரிதாக இல்லாத காரணத்தினால் துணை நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் உள்ளே வெளியே, ஆறு, ஜனா, வேல், குமரன், சன் ஆப் மகாலட்சுமி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிக்கிறார்கள். பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது சின்னத்திரையில் சில சீரியல்களில் நடிப்பதை தொடர்ந்தார்.  அடிபட்ட நிலையில் தற்போது பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசி வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பொதுவாழ்க்கைக்கு வந்து விட்டால் எல்லா விமர்சனங்களும் எல்லா சூழ்நிலையிலும் பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.  அவர் பத்திரிக்கையாளர் முறையில் அவருடைய வேலையை செய்கிறார். அதனால் ஏற்படும் பாவங்களை அவரே அனுபவிப்பார் என்று கூறினார்.

மேலும் 1990இல் ஊரெல்லாம் உன் பாட்டு என்ற ராமராஜனுடன் நடிப்பதற்காக சென்று இருந்தோம் அப்பொழுது ஒரு குடும்பப் பாங்கான பெண் கதாபாத்திரத்தில் நடிக்க நான் சென்று இருந்தேன் அப்போது அங்கு கூடியிருந்த கூட்டத்தில் யாரோ ஒருவர் ஐஸ் வரியா என என்னை அழைத்தார் இது தான் இந்த சமூகம்.

இப்பொழுது வேலை இல்லாமல் தவித்து வருகிறேன் மோசமான நிலையில் இருக்கிறேன் இந்த நிலை மாற வேண்டுமென்றால் எனக்கு வேலை வேண்டும். வேலை இல்லை, எனக்கு பொருளாதாரமும் இல்லை.  அதனால் ஜாலியாக சோப்பு விற்றுக்கொண்டிருக்கிறேன்.  இப்போதுகூட கடன் இல்லை வேறு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் வேலை இல்லை நான் இப்போது செய்ற வேலையை எண்ணி நான் வருத்தப்படவில்லை, நான் பெருமைப்படுகிறேன்.

எந்த வேலையாக இருந்தாலும் சொல்லுங்கள் நான் செய்வேன்.  நீங்கள் நான் செய்ற வேலையை செய்து விட்டு அதற்கான ஊதியத்தை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பேன். இதில் என்ன தவறு இருக்கிறது. நான் ஆடம்பரமான ஆல் இல்லை,  பட்டுப்புடவையும் கட்டுவதில்லை,யோகா பயிற்சியின் மூலம் ஒரு வேளைதான் சாப்பிடுகிறேன்.

ஆனால் தற்போது எனக்கே பொருளாதாரத்தில் மாற்றம் இருக்க வேண்டும் என்றால் நிச்சயம் எனக்கு ஒரு மெகா சீரியல் வேண்டும் நான் பிழைத்தது சீரியலை வைத்துதான் சினிமாவால் இல்லை.  எனக்கு சினிமா சோறு போடவில்லை, டிவி தான் சோறு போட்டது என்று அவர் கூறி உள்ளார்.