மொட்ட சிவா, கேட்ட சிவா பட இசையமைப்பாளர் 26 கோடி மோசடி.! புலம்பும் பிரபல நடிகை.

தமிழ் சினிமாவில் வெற்றி கண்ட முன்னணி நடிகர், நடிகைகளின் வாரிசுகளும் தற்போது சினிமாவில் ஏதோ ஒரு மூலையில் பணியாற்றி வருகின்றனர்.

அந்தவகையில் ஜெயசித்ராவின் மகனான அம்ரிஷ் தற்போது சினிமாவில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி உள்ளார் இவர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படம் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களுக்கு இசையமைத்து மக்களின் ஆதரவை பெற்றார் அம்ரிஷ்.

பார்க்க நல்ல பையன் போல் தெரியும் அம்ரிஷ் சமீபத்தில் ஒரு மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டார் சமீபத்தில் தன்னுடைய வீட்டில் பாடல்களை கம்போஸ் செய்து கொண்டிருக்கும்போது திடீரென ஒருவர் வந்து அவரை அழைத்துச் சென்றார்.

பதட்டமடைந்த ஜெயசித்ரா உடனடியாக கமிஷனர் ஆபீசுக்கு போன் செய்து யாரோ ஒருவர் எனது மகனை கடத்தி விட்டார் என கூறினார் அதன்படி விசாரித்த காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றது மோசடி குற்ற பிரிவைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் அழைத்துச் சென்றதாக தெரியவந்தது.

பின்ன இந்த கேசை விசாரித்த போது தான் தெரிகிறது அம்ரிஷ் இரிடியம் மோசடியில்  கூட்டாளிகளுடன் இவரும் சேர்ந்து  செயல்பட்டதாக தெரிய வருகிறது.

இவர்கள் எல்லோரும் சேர்ந்த தொழிலதிபர் உங்களிடம் போலியான இரிடியம் பொருளை 26 கோடிக்கு விற்று உள்ளனர்.

இந்த சம்பவத்தை 2013 ஆம் ஆண்டிலேயே அரங்கேற்றி உள்ளனர்.

அம்ரிஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீதும் வழக்கு பதிவு போடப்பட்டு உள்ளது.

Leave a Comment