வைபவ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்.! இந்த கான்செப்ட் நல்லா இருக்கே.

வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வைபவ்.இவர் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் கூட்டணியில் வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தின் மூலம் இவர்கள் இருவருமே சினிமாவில் பிரபலமடைந்து இவர்கள் இருவருக்கும் இந்த திரைப்படம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் பொதுவாக நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் காமெடி கலந்த வித்தியாசமான படமாக இருப்பதால் இவரின் நடிப்பில் வெளியாகும் திரைப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வைபவ் மற்றும் வாணி போஜன் கூட்டணியில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் லாக்கப். இதனை தொடர்ந்து இவர்களின் கூட்டணி மிகவும் நன்றாக அமைந்தால் அடுத்த படத்திலும் இவர்கள் இணைந்து நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் மலேசியா டு அம்னிஷியா என்ற திரைப்படம் இவர்களின் கூட்டணியில் விரைவில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டைட்டிலை பார்க்கும் போதே தெரிகிறது கண்டிப்பாக காமெடி கலந்த திரில்லர் படமாக இருக்கும் என்று. இத்திரைப்படத்தை மொழி, பயணம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராதாமோகனின் இயக்கி உள்ளார்.

இதைத்தொடர்ந்து இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ளார். இத்திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பறவி வருவதால் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளது. எனவே இத்திரைப்படம் ஜீ5 என்ற இணையதளத்தில் நேரடியாக மே 28-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்துள்ளது.