அம்மாவின் நினைவு நாள் இன்று : அவுங்க இங்க தான் இருங்காங்க.. கண்கலங்கிய படி சொன்ன டி. இமான்.! சோகத்தில் ரசிகர்கள்.

0
d. iman
d. iman

தமிழ் சினிமாவில் பல்வேறு இசை ஜாம்பவான்கள் இருந்தாலும் தனக்கென ஒரு தனி இசையை  பாதையை உருவாக்கி தனக்கான ரூட்டை சிறப்பாக பிடித்து வலம் வந்து கொண்டிருப்பவர் டி இமான். இவர் இதுவரையிலும் 100க்கு மேற்பட்ட படங்களில் இசையமைத்து உள்ளார் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்ற திரைப்படத்தில் இசையமைத்து அறிமுகமானார்.

இப்படி சிறப்பாக வந்தாலும் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் மட்டும்  கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் அஜித்துடன் இணைந்து இவர் விசுவாசம் திரைப்படத்தில் பணியாற்றினார் இந்த திரைப்படத்தில் கண்ணனே கண்ணே பாடல் அனைவரையும் மயக்கி போட்டதோடு பல விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆக மாறினார் மேலும் தேசிய விருதையும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அவரது அம்மாவின் நினைவு நாள் அவரது அம்மா இறந்து இதுவரை பதிமூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த நிலையில் டி இமான் ஒரு புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

அம்மா கடைசியாக ICU வில் இருக்கும் பொழுது நாங்கள் கேக் வெட்டி கொண்டாடினேன் அது எங்க அம்மாவுக்கு அப்போது தெரியாது இதுதான் கடைசி தருணம் என்று ஆனால் அதன் பின்னர் இருபத்தி ஐந்தாம் தேதி எங்கம்மா சொர்க்கத்திற்கு போய்விட்டார்கள். இன்று அவரது நினைவு நாள் இன்று எனது அம்மா சொர்க்கத்தில் இருப்பார்கள் என பதிவு போட்டிருந்தார்.

d. iman
d. iman

இதனை கண்ட ரசிகர்கள் நிச்சயம் உங்க அம்மா சொர்க்கத்தில் உள்ளார் உங்க அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும் என இரங்கல் தெரிவித்தனர் ரசிகர்கள்.

d. iman
d. iman