2023 – ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள்.? துணிவு, வாரிசு கிடையாது.?

2022 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் நடிகர், நடிகைளுக்கு நல்ல ஆண்டாக அமைந்த நிலையில் 2023 நல்ல ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் ஆரம்பத்திலேயே நடிகர் அஜித்தின் துணிவு, நடிகர் விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு படங்கள் பெரிய அளவில் இறங்க உள்ளது.

இரண்டு படமுமே வெற்றி பெற வேண்டுமென ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர் அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பணத்தை மைய்யமாக வைத்து உருவாகி உள்ளது இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மறுபக்கம் விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார்

இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியிருந்தாலும் விஜய்க்காக இந்த படத்தில் ஆக்சன் காமெடி ரொமான்ஸ் என அனைத்தும் வைத்திருப்பதாக வம்சி கூறி இருக்கிறார் இந்த இரண்டு திரைப்படங்களையும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தாலும் 2023ல் இந்த படங்களை விட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது வேறு இரண்டு திரைப்படங்கள் தான்..

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அஜித் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவனுடன் முதல்முறையாக கைகோர்த்து தனது ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த படம் முகவரி பாணியில் ஆக்சன் இல்லாத ஒரு படமாக உருவாக இருக்கிறது. அதேபோல் தளபதி 67 திரைப்படமும் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக  உருவாகிறது

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பல டாப் நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர் என சொல்லப்படுகிறது இந்த இரண்டு திரைப்படங்கள் தான் 2023 – ல் ரசிகர்கள் அதிகம் எதிர்நோக்கி காத்திருக்கின்றனாராம். இந்த தகவல் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment