குடும்ப பாங்காக நடித்த மோனிகா.! திடீரென காணமால் போனது ஏன் தெரியுமா.

0

ஒரு காலகட்டத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து இருந்தவர் மோனிகா என்ற ரேகா மருதராஜ்.இவர் 1990 ஆம் ஆண்டு அவசர போலீஸ் 100 என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் முலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இதனை தொடர்ந்து அவர் தெலுங்கு,மலையாளம், கன்னடம் மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 2002 ஆம் ஆண்டு அழகி என்ற திரைப்படத்தில்  தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இப்படத்தினை தொடர்ந்து அவருக்கு தமிழில் அதிகப்படியான பட வாய்ப்புகள் கிடைத்தது. காதல் அழிவதில்லை ,பகவதி ,இனிது இனிது காதல் இனிது ,சண்டைக்கோழி ,இம்சை அரசன் 23ம் புலிகேசி, சிலந்தி, கௌரவர்கள் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒரு காலகட்டத்தில் சிறப்பாக வந்து கொண்டிருந்தவர்.

மேலும் சிறப்பாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த நிலையில் திடீரென திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகி ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் இருப்பினும் திருமணத்தை தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தாலும் அதனை மறுத்துள்ளார் மோனிகா.முதலில் இந்துவாக இருந்து பின் இஸ்லாம் மதத்தை கடைப்பிடித்து பின் தன்னை முழுவதுமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றிக்கொண்டார்.

image
image

பிறகு தனது பெயரை ரஹீமா என்று மாற்றிக்கொண்டார் அதன்பின் 2015ஆம் ஆண்டு மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்பொழுது என்ன பண்ணுகிறார் எங்கு இருக்கிறார் என்று கூட பலருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது.