Money Heist வெப் சீரிஸில் விஜய், அஜித், ஷாருக்கான் இயக்குனர் வெளியிட்ட தகவல்!!

Money heist web series director said vijay, ajith, sharukhan who acts in kollywood: தற்போது நடிகர், நடிகைகள் என அனைவரும் தங்களது முழு கவனத்தையும் வெப்சிரிஸ் பக்கம் திருப்பி உள்ளார்கள்.போட்டி போட்டுக்கொண்டு வெப்சீரிஸில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில்  தற்போது உள்ள இளைஞர்கள் நெட் பிளக்ஸில் ஒளிபரப்பாகும் வெப் சீரிஸ்களை பார்ப்பதில் அதிக கவனத்தைச் செலுத்துகிறார்கள்.

கொரோனா ஊரடங்கு உத்தரவு காலத்தில் வீட்டில் குடும்பத்தோடு அனைவரும் பார்க்கத் தொடங்கிவிட்டனர். தற்போது உள்ள அனைத்து முன்னணி நடிகர்களும் வெப் சீரிஸில்  நடிப்பதற்கு அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். மேலும் வெப்சீரிஸ் ரசிகர்கள் மணி ஹாய்ஸ்ட் என்ற சீரியலை அஜீத்தை வைத்து இயக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறிக்கொண்டிருந்தார்கள்.

அந்த வகையில் இந்த மணி ஹாய்ஸ்ட் வெப் சீரிசை இயக்கிய இயக்குனரிடம் பிரபல யூடியூப் சேனல் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. அதில் மணி ஹாய்ஸ்ட் சீரிஸில் நம்ம கோலிவுட்டில் இருப்பவர்கள் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் எனக் கேட்டுள்ளனர். அதற்கு அவர் எந்த கேரக்டரில் யார் யார் நடித்தால் எப்படி இருக்கும் என விவரித்துள்ளார்.

தளபதி விஜய் அவர்கள் ப்ரொஃபஸர் ஆகவும், அஜித் அவர்கள் மயதோ என்ற கதாபாத்திரமாகவும், ஷாருக்கான் அவர்கள் பெர்லின் என்ற கதாபாத்திரத்திலும் நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment