மைக் மோகன் வைத்த சாதனையை முறியடிக்க முடியாமல் தற்போது வரை தவித்து வரும் கமல், ரஜினி.? பல வருடங்கள் கழித்து இணையத்தில் வெளியான அதிரடி தகவல். நினைச்சுக் கூட பார்க்க முடியல.

0

தமிழ் திரையுலகில் ஒரு நடிகர் வித்தியாசமான ஒரு செயலை செய்து காட்டினால் உடனே பலரும் அவர் செய்த செயலை வைத்து பெயர் வைத்து விடுவார்கள் அந்த வகையில் தமிழ் திரை உலகிற்கு மூடுபனி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகர் தான் மோகன்.

இவர் அந்த காலத்தில் நடித்த மௌன ராகம்,நெஞ்சத்தைக் கிள்ளாதே, உதயகீதம் போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் பல விதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.குறிப்பாக இவர் பல திரைப்படங்களில் மைக் பிடித்து பாடல் பாடுவது போல் பாடகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இவரை மைக் மோகன் என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்களாம்.

மேலும் இவர் ஒரு சில த்ரில்லர் கதை களம் கொண்ட திரைப்படங்களையும் ரசிகர்களுக்கு கொடுத்து உச்ச நட்சத்திரமாக விளங்கியுள்ளார் இவரை பற்றி தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது நடிகர் மைக் மோகன் 1984-ஆம் ஆண்டு மட்டுமே கிட்டத்தட்ட 19 படங்கள் நடித்து யாரும் முறியடிக்காத சாதனையை படைத்தாராம்.

இவருக்கு பின்பு இந்த சாதனையை நடிகர்கள் ரஜினி,கமல் கூட முறியடிக்கவில்லை என்று இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இப்படி ஒரு வரலாறு இருக்கிறதா எங்களுக்கு தெரியாமல் போய் விட்டதே என கூறி வருகிறார்கள்.

mokan
mokan

ஆனாலும் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் பல பிரபலங்களும் இது உண்மை என கூறுகிறார்கள் என்று இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.