விடாமுயற்சி படத்தில் மோகன்லால்.? ரசிகர்களை குஷி படுத்திய புகைப்படம்

Vidaamuyarchi
Vidaamuyarchi

Ajith meet Mohanlal : நடிகர் அஜித்குமார் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் அந்த வகையில் வலிமை படத்தை தொடர்ந்து இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது படம் முழுக்க முழுக்க மக்களுக்கு நல்ல மெசேஜ் தரக்கூடிய ஒரு படமாக இருந்ததால் அதிக நாட்கள் ஓடி 230 கோடிக்கு மேல் அள்ளி வெற்றி கண்டது.

அதனை தொடர்ந்து லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் படம் பண்ண உள்ளார் என பேச்சுக்கள் அதிகமாகின ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன கதையின் இரண்டாவது பாதி சிறப்பாக இல்லாததால் அவரை நீக்கி விட்டு மகிழ் திருமேனிடம் தஞ்சமடைந்தது அவர் சொன்ன கதை ரொம்ப பிடித்துப் போகவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் விடாமுயற்சி சூட்டிங் தொடங்கவே இல்லை.. இதனால் கடுப்பானடு ரசிகர்கள் அப்டேட் கேட்க ஆரம்பித்தனர் இந்த சூழ்நிலையில் தான் சந்திரமுகி 2  இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த சுபாஷ்கரனிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்டனர். விடாமுயற்சி எங்களுக்கு மிகப்பெரிய ப்ராஜெக்ட் நிச்சயம் ஷூட்டிங் தொடங்கும் என கூறினார் அதனை தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

படத்தின் ஷூட்டிங் அபுதாபி மற்றும் துபாயில் நடக்கும் என்றும் படத்தில் த்ரிஷா ஹீரோயின்னாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.மேலும் அர்ஜுன் தாஸ், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார்  மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லாலை சந்தித்து பேசி உள்ளார். புகைப்படமும் எடுத்துள்ளார்.

Ajith
Ajith

இதை பார்த்த ரசிகர்கள் ஜெயிலர் படத்தை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி படத்தில் மோகன்லால் நடிக்க உள்ளார் அது குறித்துதான் சந்தித்திருப்பார்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இதோ அஜித் மற்றும் மோகன்லால் இணைந்து எடுத்துக் கொண்ட அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Ajith and Mohanlal
Ajith and Mohanlal