ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் கர்ணன் திரைப்படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய மோகன்லால்.!!

0

தனுஷ் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்றால் அது கர்ணன் திரைப்படம் தான் இந்த திரைப்படம் வரும் 9ஆம் தேதி முதல் உலகமுழுவதும் வெளியாகவுள்ளது.

மேலும் கர்ணன் திரைப்படத்தின் கண்டா வரச் சொல்லுங்கள் என்ற பாடல் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் கர்ணன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது இந்த திரைப்படத்தை பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் அந்த தகவல் என்னவென்று கேட்டால் கர்ணன் திரைப்படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையை நடிகர் மோகன்லால் கைப்பற்றியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் அதுமட்டுமல்லாமல் அசுரன் திரைப்படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையையும் மோகன்லால் தான் கைபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ணன் திரைப்படத்திற்காக சந்தோஷ் நாராயணன் இசையமைக்க கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து இந்த தகவல் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.