சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்துவிட்டு மோகன்ஜி.! பா. ரஞ்சித் மற்றும் ஆர்யாவுக்கு என்ன மெசேஜ் சொன்னார் தெரியுமா.? ஷாக்கான ரசிகர் கூட்டம்

0

சினிமாவில் குறைந்த திரைப்படங்களை எடுத்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பொருளாக இருந்து வருபவர் இயக்குனர் மோகன் ஜி. காரணம் இவர் படத்தை தாண்டி மற்ற படங்களை அவ்வப்போது விமர்சிப்பது, புகழ்ந்து தள்ளும் ஆக இருந்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக ஜாதி படங்கள் எடுப்பவர்களுக்கு எப்பொழுதும் மோதிக் கொள்வது வழக்கம் அந்த வகையில் மோகன் ஜி- க்கும், பா ரஞ்சித்துக்கும் எப்பொழுதுமே செட்டாகாது.

திரௌபதி படத்தை தொடர்ந்து மோகன்ஜி தற்பொழுது ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி இஷா குப்தா போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

திரைப்படத்தை தற்போது விறுவிறுப்பாக மோகன்ஜி எடுத்து வருகிறார் இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரசிகர்களுடன் உரையாடினார் மோகன்ஜி அப்போது ரசிகர் ஒருவர் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் டிரைலரை குறித்து அவரிடம் கேட்டார்.

பார்த்துவிட்டு மோகன்ஜி இதைப் பார்க்கும் போதே தெரிகிறது படக்குழுவின் திறமையும் அர்ப்பணிப்பும் நல்லதாகவே தெரிகிறது படம் சிறப்பாக இருந்தால் நானே கொண்டாட வேண்டும் என கூறியிருந்தார் அதற்கு ஏற்றார் போல இன்று படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

mohan ji
mohan ji

இந்த நிலையில் இன்று படத்தை பார்த்துவிட்டு மோகன்ஜி ட்வீட் போட்டுள்ளார் ஒட்டுமொத்த டீமின் நல்ல முயற்சி சார்பட்டா பாரா பரம்பரை, நான் கடவுள் படத்துக்கு பிறகு ஆர்யாவின் சிறந்த படம் என்றால் அது இதுதான் மேலும் இவருடன் இணைந்து நடித்த பசுபதி, ஜான் விஜய், டான் ரோஸ் ஆகியோர் கதாபாத்திரங்கள் வியக்கும்படி இருந்ததாக குறிப்பிட்டார்.

மேலும் பா ரஞ்சித் அவர்களின் கடின உழைப்பிற்கு உதாரணம் இந்தப் படம் அமேசான் அடுத்த ஒரு ஹிட் படம் என்று பதிவிட்டிருந்தார். பா ரஞ்சித்துக்கு   எப்பொழுதும் எதிர்மறையான கருத்துக்களை கூறி வந்த மோகன்ஜி தற்போது இது போன்ற ஒரு கருத்தை வெளியிட்டது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.