கொளுத்துடா வெடியை.. திரௌபதி படத்தின் சென்சார் முடிந்தது இதோ ரிலீஸ் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் திரௌபதி, இதற்கு முன் மோகன் பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தை இயக்கியுள்ளார், இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் விழுப்புரத்தை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தத் திரைப்படத்தின் டிரைலரை வேறு சமூகத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்பவர்களை குறிப்பிட்டும் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியின் வசனங்களை குறிப்பிட்ட வசனங்கள் உள்ளன.

இதனைப் பல பிரபலங்கள் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர், ஏற்கனவே திரவுபதி படத்தை பற்றி இயக்குனர் சில விவரங்களை கொடுத்தார், பல பிரச்சனைகளை கிளப்பிய இந்த திரைப்படத்திற்கு ஒரு சில அரசியல் அமைப்புகள் படத்திற்கு தடை கோரி முன்வந்தார்கள் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தற்போது வெளியாகியுள்ளன.

திரவுபதி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தணிக்கைக்குழு வழங்கியுள்ளது, இதனாலேயே திரௌபதி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது உலகம் முழுவதும் தமிழர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக இருக்கும் எனக் கூறுகிறார்கள் இந்த நிலையில் இன்று மாலை திரவுபதி திரைப்படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என இயக்குனர் அறிவித்துள்ளார்,.

Leave a Comment