மோடியின் அண்ணன் மகள் என்று கூட பார்க்காமல் கைவரிசை காட்டிய இளைஞர்கள். அதிர்ச்சி சம்பவம்

0
modi
modi

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் மகளிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரரான பிரகலாத் மோடியின் மகள் தமயந்தி பெண் மோடி, இவர் அதிகாலையில் 7 மணி அளவில் அமிர்தசரஸில் இருந்து டெல்லி சென்றுள்ளார், இவர் ஆட்டோவில் சென்றுள்ளார் அப்பொழுது குஜராத்தை பவன் என்ற இடத்தில் இறங்கியுள்ளார்.

இவர் தனியாக நின்று கொண்டிருந்ததை பார்த்த திருடர்கள் இருவர் அவரிடம் இருக்கும் கைப்பையை திருடிச் செல்ல திட்டமிட்டார்கள், இந்தநிலையில் அவர் தனிமையில் இருக்கும்பொழுது ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் வேகமாக வந்தார்கள் அப்போது தமயந்தி கையில் வைத்திருந்த கைப்பையை வலுக்கட்டாயமாக பறித்து சென்றுள்ளார்கள்.

இதனால் தமயந்தி உடனே கூச்சலிட்டார் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவர்களைத் துரத்தினார்கள் ஆனால் மின்னல் வேகத்தில் சென்றதால் அவர்களின் வாகனம் மற்றும் அவர்களைப் பற்றி எந்த ஒரு அடையாளமும் தெரியவில்லை. இந்தநிலையில் இச்சம்பவம் பற்றி காவல் நிலையத்தில் தமயந்தி புகார் அளித்தார், புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட அவர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.

இந்த சம்பவம் டெல்லி துணை முதலமைச்சர் மற்றும் ஆளுநர் வீடுகளில் உள்ள பகுதிகளில் நடைபெற்றதால் அங்கு சிசிடிவி கேமராக்கள் மூலம் அவர்களை தீவிர தேடும் பணியில் ஈடுபட்டார்கள், தமயந்திடம் அடித்து செல்லப்பட்ட கைப்பையில் 50 ரூபாய் ரொக்கப் பணமும், இரண்டு செல்போன்களும் விமான டிக்கெட்டும் இருந்ததாக அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.

சிசிடிவி கேமராவில் அவர்களின் முகம் மற்றும் அடையாளம் சரியாக தெரியவில்லை, இருந்தாலும் விசாரணையை தொடங்கினார்கள் இந்தநிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களில் ஒருவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தார்கள் அவனிடமிருந்து பொருட்களை கைப்பற்றி தமயந்தியிடம் ஒப்படைத்தார்கள், மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மற்றொருவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.