பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கப்போகும் உலக அழகி!! பிரபுவை பார்த்து பொறாமை படும் ரசிகர்கள்.

0

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இத்திரைபடம் முழக்க முழக்க ஒரு தமிழ் நாவலை தழுவி எடுக்க பட இருக்கிறதாம்.

இத்திரைப்படத்தில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் ராஜராஜ சோழன் கதாபததிரத்தில் ஜெயம் ரவியும், வந்தியதேவன் கதாபாத்திரத்தில் கார்த்திக்கும்  நடிக்கிறார்கள் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர்  கதாபாத்திரத்தில்  பிரபுவும்  இவருக்கு காதலியாக நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயும் நடிக்கப் போவதாகவும் மற்றும் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது.

தற்போது சரத்குமாருக்கு இதை விட ஒரு பெரிய கதாபாத்திரம் கொடுப்பதாக கூறி உள்ளார்கள் எனவே சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கலாம்.