காதலில் நயன்தாராவின் விக்கியை மிஞ்சிய உலக அழகி சுஷ்மிதா சென்னின் !! 14 வயது குறைவான காதலர்.

0

Miss World Sushmita Sen lover is 14 years younger than her: சுஷ்மிதா சென் 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். மேலும் அதனை தொடர்ந்து அதே ஆண்டில் உலக அழகிப் போட்டியிலும் வெற்றி பெற்றார். சினிமா துறையினர் எப்பொழுதுமே உலக அழகிகளை சினிமா துறையில் இழுத்துவிடுவது வழக்கம்.

அந்த வகையில் நடிகை சுஷ்மிதா சென் நாகர்ஜூனா உடன் இணைந்து ரட்சகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு வெளியான நோ பிராபளம் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தான் தத்து எடுத்து வளர்த்து வந்த இரண்டு பெண் குழந்தைகள் மீதும் முழு கவனத்தை செலுத்தி வந்தார். அந்த குழந்தைகளுக்கு ரெனி சென் மற்றும் அலிசா சென் என பெயரிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் வீட்டிலேயே முடங்கி உள்ள சுஷ்மிதாசென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது மகள்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் நடிகை சுஷ்மிதா சென்னிற்க்கு தற்போது 44 வயது ஆகிவிட்டது. ஆனால் இவர் தன்னை விட 14 வயது சிறியவரான ரொமன் ஷால் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

சுஷ்மிதா சென்னின் காதலரான ரொமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷ்மிதா சென்னின் உலக அழகி பட்டம் பெற்ற புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளார். மேலும் அதில் இன்றுடன் சுஷ்மிதாசென் உலக அழகி பட்டம் பெற்று 26 வருடங்கள் ஆகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் நீங்கள் அனைவரையும் பெருமைப்படுத்துனிகள் அதை இன்னும் தொடர்ந்து செய்யுங்கள் ஐ லவ் யூ என்று பதிவிட்டுள்ளார்.

sushmita sen-tamil360newz
sushmita sen-tamil360newz
sushmitalover-tamil360newz
sushmitalover-tamil360newz