மணிரத்னத்துடன் கைகோர்த்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்.! பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நான்கு தரமான திரைப்படங்கள்.!

0
ishwarya rai
ishwarya rai

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்து வருகிறது இந்த திரைப்படத்தில் பல சினிமா பிரபலங்கள் நடித்திருந்தாலும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் நடிப்பை  தற்பொழுது வரை பல ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா நடித்த நான்கு திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் தற்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது அந்த நான்கு திரைப்படங்கள் என்ன என்னவென்று பார்ப்போம்.

இருவர் மோகன்லால் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ்,ஐஸ்வர்யா ராய்,நாசர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள் ஐஸ்வர்யா ராய் புஷ்பவல்லி மற்றும் கல்பனா என்ற இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதுபோன்று குரு திரைப்படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது அபிஷேக் பச்சன்,ஐஸ்வர்யா ராய் மற்றும் பல சினிமா பிரபலங்களின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று ஓரளவுக்கு வசூல் செய்தது.

ராவணன் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் ஐஸ்வர்யா ராய்,பிரித்திவிராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவானது இந்த திரைப்படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசை மிகவும் மக்களால் பாராட்டப்பட்டது இந்த திரைப்படம் வெளியான பொழுது விக்ரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

manirathnam
manirathnam

பொன்னியின் செல்வன் கடந்த 30ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் 500 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் முதல் நாளிலேயே பல கோடி வரை வசூல் செய்தது மேலும் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் கனகச்சிதமாக நடித்திருந்தார்.தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் தமிழில் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருந்து வருகிறது.