தளபதி 67 படத்திலிருந்து கழண்டு கொண்ட “மிஷ்கின்” – காரணத்தை கேட்டு அதிர்ந்த லோகேஷ்.!

தளபதி விஜய் முதல்முறையாக இயக்குனர் வம்சி உடன் கைகோர்த்து நடித்து வரும் திரைப்படம் வாரிசு இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகி வருகிறது அதேசமயம் இந்த படத்தில் தளபதி விஜய் மிகப் பெரிய ஒரு பணக்காரராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மாஸ்டர். அதே இயக்குனருடன் கைகோர்த்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.

அதற்கு ஏற்றார் போல இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் விஜய் வருவதற்குள் கதை ஏற்றபடி நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகிறார் அந்த வகையில் தளபதி 67 திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது அதனால் இந்த படத்தில் மட்டுமே ஆறு ஏழு வில்லன்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த படத்தில் சஞ்சய் தத், விஷால், மிஷ்கின்  மற்றும் பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தகவலும் அதாவது தளபதி 67 திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கனை நடிக்க வைக்க மொத்தம் 30 நாள் கால்ஷீட் கேட்டு உள்ளாராம். ஆனால் திடீரென மிஸ்கின் இந்த படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம் என்ன காரணம் என்று பார்த்தால்..

ஏற்கனவே விஷாலுக்கும் மிஷினுக்கும் செட்டாகாது இப்பொழுது விஷாலுக்கு வில்லனாக நடிப்பது சரியாக இருக்காது எனக் கூறி மிஷ்கின்  இந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது இதற்கான உண்மையான காரணத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்னால் மட்டுமே நமக்கு தெரியும்..

Leave a Comment