விஜய்யை கொஞ்சம் கூட மதிக்காத மிஷ்கின்…! தர்ம சங்கடத்தில் லோகேஷ் கனகராஜ்..! உச்சகட்ட கோவத்தில் தளபதி..

0
thalapathy-67
thalapathy-67

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தற்பொழுது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான உடன் தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் பணிகளில் மிகவும் முன்புறமாக ஈடுபட்டு வருகிறார் அது மட்டும் இல்லாமல் தற்போது மிகவும் பரபரப்பாக படபிடிப்பு நடைபெற்று வருகிறது. தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாந்த் ஸ்டூடியோ மற்றும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் ஜானரில் இருக்கும் என ஏற்கனவே நமக்கு தகவல் கிடைத்தது ஏனென்றால் இதற்கு முன் உள்ள திரைப்படங்கள் விஜய்க்கு ஏற்றார் போல் இருந்தாலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் திரைப்படமாக உருவாக இருக்கிறது அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் பிரபலங்களிடையேவும் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் சுமார் ஏழு கேங்ஸ்டர் 7 குழுவாக இருக்கிறார்கள் அதில் ஒரு கேங்ஸ்டர் குழுவின் தலைவனாக மிஸ்கின் நடித்துள்ளார். இந்த நிலையில் விஜய் ஒரு ரெஸ்ட்ரோ பார் நடத்துகிறார் அந்த ரெஸ்ட்ரோபாரில் மிஸ்கின் வேலை செய்து வருகிறார் இதுபோன்ற பல சுவாரசியமான தகவல்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பட குழு எந்த ஒரு காரணத்திற்காகவும் படத்தில் என்னென்ன படப்பிடிப்புகள் என்னென்ன காட்சிகள் நடைபெற்று வருகிறது என்பதை வெளியே கசிந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார்கள்.

ஏனென்றால் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏகப்பட்ட வரவேற்பில் இருப்பதால் காட்சிகள் கசிந்தால் படத்தின் சுவாரசியம் குறைந்துவிடும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள் இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படபிடிப்பில் அவர் நடிக்கும் காட்சிகள் குறித்தும் என்ன காட்சிகளில் நடித்துள்ளார் என்பதையும் வெளிப்படையாக பேசி உள்ளது லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு மிகப்பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

மிஷ்கின் ஒரு முத்த இயக்குனர் என்பதால் லோகேஷ் கனகராஜ் அவர்களால் தட்டிக் கேட்க முடியவில்லை மிகவும் தயக்கம் காட்டுகிறார் அதே நேரத்தில் இந்த விஷயம் விஜய் காதுக்கு சென்றதால் தொடர்ந்து மீண்டும் மிஷ்கின் மீது மிகவும் கோபமாக இருக்கிறார். இப்படியே சென்றால் அவர் கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து நடிகரையே மாற்றி விடலாம் என உச்ச கட்ட  கோபத்தில் இருக்கிறாராம் தளபதி. ஆனால் அந்த கதாபாத்திரத்தில் திடீரென புது நடிகரை மாற்றிவிட்டால் இதுவரை மிஷ்கின் அவர்களை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் படத்தில் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்படும் என்பதால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மிஸ்கின் அவர்களிடம் பேசி இது போன்ற தவறுகள் எதுவும் நடக்காமல் வலியுறுத்த முயற்சி செய்து வருகிறார் ஆனால் மிஸ்கின் இதை ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை அது மட்டும் இல்லாமல் ஒரு மூத்த இயக்குனரே இதுபோன்று தவறு செய்வது படத்தில் உள்ள அனைவரையும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது அதனால் இந்த தவறை உணர்ந்து அவர் இதுபோல் செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என சினிமா வட்டாரங்கள் கூறுகிறார்கள்.